யூடியூபில் கோடிக்கணக்கான வீடியோக்களை பார்த்து மகிழ்ந்திராத மக்களே இருக்க முடியாது. இருப்பினும் இதனை இன்னும் சிறப்பாக பயன்படுத்தும் அளவில் கூகுள் குரோம் ஒருசில எக்ஸ்டென்ஷன்களை அறிமுகம் செய்துள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? வாருங்கள் தெரிந்து கொள்வோம்

யூடியூப் வீடியோ பார்க்கும்போது சில வித்தியாசமான அனுபவங்களை பெற பல எக்ஸ்டென்ஷன்கள் இருந்தாலும் முக்கிய ஐந்து வகையை தற்போது பார்ப்போம்

டர்ன் ஆஃப் லைட் (Turn of Light)

ஒரு தியேட்டரில் படம் போடும்போது எப்படி அனைத்து லைட்டுகளையும் அணைத்து விடுகின்றார்களோ, அதுபோல் யூடியூப் வீடியோவில் வீடியோ பகுதியை தவிர ஸ்க்ரீனில் உள்ள மற்ற எல்லாவற்றையும் டார்க் செய்து விடும் ஒரு எக்ஸ்டன்ஷனே இந்த டர்ன் ஆப் லைட்.

இதை நீங்கள் பயன்படுத்தினால் தியேட்டரில் படம் பார்ப்பது போன்ற ஒரு உணர்வும் கவனத்தை சிதறடிக்காத மனநிலையும் நமக்கு உண்டாகும்

ஃபாஸ்ட் யூடியூப் சியர்ச் (Fast Youtube Search)

யூடியூப் இணையதளத்தை தனியாக ஓப்பன் செய்யாமலே நீங்கள் குரோம் பிரெளசரை பயன்படுத்தி கொண்டிருக்கும்போதே நேரடியாக அதில் இருந்தே கிளிக் செய்து வீடியோவை பார்க்கும் ஒரு வசதி தான் இந்த ஃபாஸ்ட் யூடியூப் சியர்ச் எக்ஸ்டென்ஷன் ஆகும்

ஆட்டோ HD வசதி:

நீங்கள் பார்க்கும் வீடியோவில் HD அம்சங்கள் இருந்தால் ஆட்டோமெட்டிக்காக அந்த வசதியுடன் வீடியோவை பார்க்கலாம். 720P, 1080P வகையுள்ள வீடியோக்களை மட்டும் இதில் பார்க்கலாம்.

இந்த எக்ஸ்டன்சனை நீங்கள் இன்ஸ்டால் செய்து கொண்டால் நல்ல தரமான HD வீடியோக்களை நீங்கள் தேர்வு செய்யும்போது அதுவே தானாகவே HD தரம் மற்றும் வீடியோ சைஸ் மாறி உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை கொடுக்கும்

தானாகவே வீடியோவை நிறுத்தும். எப்படி தெரியுமா?

கூகுள் குரோமில் நீங்கள் யூடியூபை பார்த்து கொண்டிருக்கும்போது திடீரென வேறு டேப்பிற்கு சென்றுவிட்டால், இந்த எக்ஸ்டென்ஷன் உடனடியாக வீடியோவை நிறுத்திவிடும்.

இதனால் டேட்டா செலவு மிச்சமாகிறது. மீண்டும் நீங்கள் யூடியூப் டேப்பிற்குள் வந்தவுடன் வீடியோ ப்ளே ஆக தொடங்கிவிடும். இந்த எக்ஸ்டென்ஷன் மிகவும் முக்கியமான அனைவருக்கும் பயனுள்ள ஒரு எக்ஸ்டென்ஷன் ஆகும்

யூடியூப் மியூசிக் வீடியோ பாடல்கள்:

யூடியூபில் ஒரு பாடல் ஓடிக்கொண்டிருக்கும்போது நீங்களும் சேர்ந்து அதனுடன் பாட வேண்டுமா? உடனே இந்த எக்ஸ்டென்ஷனை இன்ஸ்டால் செய்யுங்கள்.

உங்கள் விருப்பத்திற்குரிய வீடியோ யூடியூபில் ஓடும்போது தனியாக ஒரு விண்டோ ஓப்பன் ஆகி, அதில் அந்த பாடலின் வரிகள் தெரியும். இப்போது நீங்கள் வீடியோவை பார்த்து கொண்டே பாடவும் செய்யலாம்.