ஹீரோயின்களின் ஸ்டிரீயோடைப்புகளை 20 வருஷத்துக்கு முன்பே உடைத்த 6 நடிகைகள்.. நடிப்பில் மிரள வைத்த அவள் ஒரு தொடர்கதை சுஜாதா

Tamil Heroines
Tamil Heroines

Women’s Day: இன்றைய மார்டன் உலகத்தில் சாலையை கடக்க தெரியாது, முட்டினால் கொம்பு முளைக்கும் என ஹீரோயின்கள் செய்யும் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை.

ஆனால் 20 வருஷத்திற்கு முன்பே ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று திரையில் வாழ்ந்து காட்டிய நடிகைகள் இருந்தார்கள். அப்படிப்பட்ட ஆறு கதாபாத்திரங்களை பற்றி பார்க்கலாம்.

ஸ்டிரீயோடைப்புகளை உடைத்த 6 நடிகைகள்

அவள் ஒரு தொடர்கதை: இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் சுஜாதா, கவிதா என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்த படம் தான் அவள் ஒரு தொடர்கதை.

பொறுப்பில்லாத ஆண்கள் இருக்கும் குடும்பத்தில் ஒரு பெண் பொறுப்பை எடுத்து நடத்துவது தான் இந்த படத்தின் கதை.

தன்னை முதன்மைப்படுத்துவது போல் இந்த கவிதா காட்டிக்கொண்டாலும் தன்னுடைய குடும்பத்திற்காக கடைசிவரை மெழுகாய் உருகி இருப்பாள்.

கல்கி: பாலச்சந்தர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான கல்கி படத்தில் வரும் அத்தனை பெண் கதாபாத்திரங்களுமே கொண்டாடப்பட வேண்டியவை.

அதிலும் சுருதி ஏற்று நடித்த கல்கி கதாபாத்திரம் ஒரு பெண் எப்படி தைரியமாக இருக்க வேண்டும் என்பதை காட்டியது. பிரகாஷ்ராஜை விழி பிதுங்கி ஓட வைக்கும் காட்சிகளில் எல்லாம் கம்பீரமாக நடித்திருப்பார் சுருதி.

அரங்கேற்றம்: அரங்கேற்றம் போன்று ஒரு படத்தை எடுக்க இனி தமிழ் சினிமாவில் யாருக்குமே தைரியம் வராது என்பது தான் நிதர்சனமான உண்மை.

70 களின் காலகட்டத்திலேயே ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண் தன்னுடைய குடும்ப சூழ்நிலைக்காக தவறான தொழிலில் ஈடுபடுவது போல் இந்த கதை எழுதப்பட்டிருக்கும்.

அதிலும் ஹீரோயின் பிரமிளா இன்று இருக்கும் அத்தனை ஹீரோயின்களுக்கும் சவால் விடும் அளவுக்கு நடித்திருப்பார்.

மனதில் உறுதி வேண்டும்: மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் சுகாசினி நடித்த நந்தினி கதாபாத்திரம் இன்றைய பல பெண்களின் பிரதிபலிப்பு தான்.

வேலை இல்லாத பெற்றோர், ஏழு உடன்பிறப்புகள், விவாகரத்து இரண்டாவது காதலிலும் தோல்வி, கடைசியாக எடுக்கும் உறுப்பு தானம் முடிவு என தைரியத்தின் மறு சின்னமாக இருப்பார்.

பத்ரகாளி: பத்ரகாளி படத்தில் காயத்ரி கேரக்டரை ஏற்று நடித்த ராணி சந்திரா ஆரம்பத்தில் சின்ன விஷயத்திற்கு கூட பயப்படும் கேரக்டர். அதீத பயத்தால் மனப்பிரழ்ச்சி ஏற்பட்டு தன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விடுகிறார்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய இந்த நிலைக்கு காரணமான நேரில் கண்டதும் அவள் பத்ரகாளியாகவே மாறுவது தான் இந்த படத்தின் கதை.

மகளிர் மட்டும்: மகளிர் மட்டும் படத்தில் வரும் ரேவதி, ரோகிணி, ஊர்வசி என மூன்று கேரக்டர்களுமே நேயர்களால் அதிகம் ரசிக்கப்பட்டவை.

ரோகினி மற்றும் ஊர்வசி தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலுக்கு ஏற்ப சில விஷயங்களில் பயந்து இருப்பார்கள்.

அவர்களின் பயத்தைப் போக்கி தைரியமான பெண்களாக மாற்றுவதில் ரேவதியின் பங்கு அதிகமாக இருக்கும். இன்றுவரை மகளிர் தினம் என்றால் இந்த படம் ஏதாவது ஒரு சேனலில் கண்டிப்பாக ஒலிபரப்பப்படும்.

Advertisement Amazon Prime Banner