இன்று வரை மக்கள் மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்திய 5 படங்கள்.. காலத்தால் அழியாத திரைக்காவியங்கள்

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றால் அது அடுத்த படம் வருவது வரைக்கும் தான் மக்கள் விரும்புவார்கள். ஆனால் சில படங்கள் பல வருடங்கள் ஆகியும் ரசிகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு இன்று வரை மக்கள் மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்திய 5 படங்களை பார்க்கலாம்.

மறுபடியும் : பாலுமகேந்திரா திரைக்கதையில் ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த்சாமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மறுபடியும். கணவனால் நிராகரித்த பெண்கள் அல்லது கணவனை இழந்த பெண்கள் தன்னம்பிக்கையுடன் இந்த சமூகத்தில் வாழ முடியும் என்பதற்காக படமாக மறுபடியும் படம் அமைந்துள்ளது.

வீடு : பாலுமகேந்திரா இயக்கத்தில் அர்ச்சனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் வீடு. ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவால் எவ்வளவு இன்னல்களுக்கு பிறகு அதை செய்து முடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை.

உதிரிப்பூக்கள் : மகேந்திரன் இயக்கத்தில் சரத்பாபு, அஸ்வினி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் உதிரிப்பூக்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காலத்தால் அழியாத படங்களில் ஒன்றுதான் இந்த உதிரிப்பூக்கள். சில மோசமான ஆண்களால் பெண்களின் வாழ்க்கை எப்படி பாதிக்கிறது என்பதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

விதி : மோகன், பூர்ணிமா, பாக்யராஜ், சுஜாதா, ஜெய்சங்கர், மனோரமா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் விதி. காதலித்து ஏமாற்றியவனை நீதிமன்றத்தில் இழத்து தன் குழந்தைகளுக்கு இவனே தங்கப்பன் என்பதை நிரூபிக்கும் இளம் பெண்ணின் போராட்டத்தின் கதை விதி. இப்படம் அப்போது நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

முதல் மரியாதை : பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் முதல் மரியாதை. ஊர் பெரியவரான சிவாஜி கணேசனுக்கும், பரிசல்கார பெண்ணான ராதாவுக்கும் இடையே நட்பும், காதலும் ஏற்படுகிறது. ஆனால் இந்த கதை சற்று பிசகினாலும் ஆபாசம் ஆகிவிடும். ஆனால் அவ்வளவு அழகான திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

Next Story

- Advertisement -