மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரைன் லாராவை கவர்ந்த 5 ஐபிஎல் வீரர்கள்.. செம்ம கணிப்பு!

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலர் தங்கள் திறமையை நிரூபித்து இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர். தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய், தங்கராசு நடராஜன், வருன் சக்ரவர்த்தி போன்ற பல வீரர்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்தனர்.

ஐபிஎல் வீரர்களில் லாராவின் மனதைக் கவர்ந்த வீரர்களை பட்டியலிட்டுள்ளார்.

சஞ்சு சாம்சன் – வழக்கமான தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் மனதை மட்டுமல்ல, பிரைன் லாரா அவர்களின் மனதையும் கவர்ந்து விட்டார் சஞ்சு சாம்சன். 14 போட்டிகளில் விளையாடி 158.89 என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்து 375 ரன்கள் குவித்திருக்கிறார்.

தேவ்தத் படிக்கல் – கர்நாடகாவைச் சேர்ந்த இளம் அதிரடி வீரர் படிக்கல். பெங்களூரு அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி 14 போட்டிகளில் 475 ரன்கள் குவித்து விட்டார்.

சூர்யகுமார் யாதவ் – பிரைன் லாராவை மட்டுமல்லாமல் சூர்யகுமார் யாதவ் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார்.வெகு விரைவில் இவர் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கேஎல் ராகுல் – இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக ஆடிய கே எல் ராகுல் 670 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி சென்றுவிட்டார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஆகவும் கலக்கி வருகிறார்.

பிரியம் கர்க் – பல போட்டிகளில் ஹைதராபாத் அணியை வெற்றி பெறச் செய்தது பிரியம் கர்க்இன் அதிரடி ஆட்டம். இளம் வீரரான இவர் இந்திய அணியின் கண்டிப்பாக ஒரு அங்கமாக விளங்குவார் என பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.

ipl2020
ipl2020