ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன், பார்தி ஏர்டெல், ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் இந்த மாதம் 4 ஜி தரவுத் திட்டங்களையும், பல சிறப்பு சலுகைகளையும் வழங்குவதாக தகவல் வந்துள்ளது.

ஜூன் மாதம் 2017 ல் நீங்கள் பெறக்கூடிய சிறந்த 4ஜி டேட்டா கட்டணத் திட்டங்கள் பொருத்தமாட்டில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன, ஜியோ பொருத்தமாட்டில் பல ஆபர்களை அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ:

ஜியோ பொருத்தமாட்டில் தண் தாணா தண் திட்டம் இப்போதும் தொடர்கிறது, இந்த மாத இறுதியில் முடிவடையும் எனக் கூறப்பட்டுள்ளது. ப்ரீபெய்ட் இந்த 4ஜி தரவுத் திட்டம், பொருத்தமாட்டில் 84 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 1ஜிபி பயன்படும் வகையில் இந்த திட்டம் பயன்படுகிறது. மேலும் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் போன்றவை இலவசம் எனக் கூறப்பட்டுள்ளது, மேலும் இதன் கட்டணம் பொருத்தமாட்டில் ரூபாய்.309 ஆக உள்ளது. ரூபாய்.509க்கு ரீசார்ஜ் செய்தால் 128ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும், மேலும் தினசரி 2ஜிபி வரை 84 நாட்களுக்குப் பயன்படுத்தமுடியும்.

அதிகம் படித்தவை:  பிராய்லர் கோழியை சாப்பிடுபவர்களா நீங்கள்? இதனை கட்டாயம் படியுங்கள்.!

போஸ்ட்பெய்டு:

ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெய்டு கட்டணம் பொருத்தவரை ரூபாய்.309க்கு ரீசார்ஜ் செய்தால், 90ஜிபி வரை 4ஜி டேட்டா கிடைக்கும், மேலும் ரூபாய்.509க்கு ரீசார்ஜ் செய்தால், 180ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

பார்தி ஏர்டெல்:

பார்தி ஏர்டெல் முந்தைய தரவுத் திட்டங்களை இன்னும் தொடர்கிறது, மேலும் ரூபாய்.244க்கு ரீசார்ஜ் செய்தால், 70ஜிபி 4ஜிடேட்டா கிடைக்கும், ஒருநாளைக்கு 1ஜிபி வரை பயன்படுத்தமுடியும். ஏர்டெல் அழைப்புகளை (உள்ளூர் மற்றும் எஸ்டிடி) தினமும் 300 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1200 நிமிடங்கள் வரை பெறமுடியும். மேலும் பல்வேறு சிறப்பு ஆபர்கள் அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

அதிகம் படித்தவை:  அட அது தமிழ் ராக்கர்ஸ் இல்லையாம்! நம்ம TamilGun அட்மின் கைது பண்ணிருக்காங்க..

வோடபோன்:

வோடபோன் ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் ரூபாய்.356க்கு ரீசார்ஜ் செய்தால், 56ஜிபி வரை 4ஜி டேட்டா கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை ஒரு நாளைக்கு 300 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1,200 நிமிடங்கள் வரைப் பயன்படுத்த வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக எஸ்எம்எஸ் கொடுக்கப்படவில்லை.

ஐடியா செல்லுலர்:

ஐடியா செல்லுலர் பொருத்தமாட்டில் ரூபாய்.348க்கு ரீசார்ஜ் செய்தால் 28ஜிபி 4ஜிடேட்டா கிடைக்கும், மேலும்; ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா வீதம் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் பல்வேறு சிறப்பு ஆபர்கள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

பிஎஸ்என்எல்:

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) திட்டம் பொருத்தமாட்டில் ரூபாய்.399க்கு ரீசார்ஜ் செய்தால் 28ஜிபி வரை 4ஜி டேட்டா கிடைக்கும், மேலும் ஒரு நாளைக்கு 2 ஜிபி வரைப் பயன்படுத்த முடியும்.