danushபிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டவர் ஷீனா சோஹன்.நடிகர் ஜெயராம் மூலம் மலையாளப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் நடித்த மலையாள படத்திற்கு பல சர்வதேச விருதுகள் கிடைத்தது. தற்போது பெங்காலி  படத்தில் நடித்திருக்கும்  ஷீனாவுக்கு தமிழ் படத்தில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறது.

இதுகுறித்து அவர் கூறியதாவது

சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம். அதனால்தான் முறைப்படி நடிப்பு கற்றேன்.மலையாளம் மற்றும் பெங்காலியில் நடித்திருந்தாலும் தமிழில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. குறிப்பாக தனுஷூடன் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை  என்கிறார் ஷீனா.