ஐபிஎல் விளையாடாமலே இந்திய டீமில் என்ட்ரி கொடுத்த வீரர்! சிறப்பான சம்பவம் இதோ 

இந்திய கிரிக்கெட் என்பது மல்டி பில்லியன் டாலர் பிஸ்னஸ். இந்திய டீம்மில் எப்படியாவது நுழைந்து விட மாட்டோமா என்ற கனவுடன் பல லட்சம் இளைஞர்கள் தினமும் போராடி உழைத்து வருகின்றனர்.

முன்பு யூ 19, ரஞ்சி போட்டிகளில், இந்திய ஏ டீம்களுக்கு நன்றாக விளையாடினால் தான் இந்திய டீம்மில் இடம் கிடைக்கும். ஆனால் இன்று ஐபிஎல் என்ற ஒன்று அந்த கண்ணோட்டத்தையே மாற்றி விட்டது. தொடர்ச்சியாக இரண்டு ஐபிஎல் சீசன் நன்றாக விளையாடினால் இந்திய டீம்மில் இடம் உறுதி என்ற நிலை இன்று வந்துவிட்டது.

இந்த சூழலில் தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத ஒருவர் இந்திய டீம்மில் நுழைந்துள்ளார். 28 வயதான பெங்காலை சேர்ந்த முகேஷ் குமார் தான் அவர். டி 20 தொடர் முடிந்த பின்பு இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் ஒருநாள் தொடர் விளையாடுகின்றனர்.

தவான் கேப்டன், ஷ்ரேயஸ் ஐயர் துணை கேப்டன். இந்த டீம்மில் ருதுராஜ், கில், இஷான் கிஷன், சாம்சன், திரிபாதி, பட்டிடர், சபாஷ் அஹமட், குல்தீப், பிஷ்ணோய், ஆவேஷ் கான், சிராஜ், தீபக் சஹர் மற்றும் முகேஷ் குமார் இடம் பிடித்துள்ளனர்.

ரெஸ்ட் ஆப் இந்தியா போட்டியில் விளையாடி வருகிறார் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ். இந்திய டீம்மின் வாட்சப் க்ரூப்பில் தான் இணைக்கப்பட்டதை பார்த்த பின்பு தான் தேர்வான விஷயமே இவருக்கு புரியவந்துள்ளது. ரஞ்சி போட்டிகள், சமீபத்தில் நியூசிலாந்து ஏ டீமுக்கு எதிராக அபாரமாக பந்து வீசினார். அதுவே இவர் தேர்வுக்கு வழி வகுத்துள்ளது.

mukesh
mukesh

30 முதல் தர போட்டிகளில் விளையாடி 109 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்த தொடரில் இவருக்கு இந்திய டீம்மில் விளையாடும் வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என சொல்லிவிட முடியாது. எனினும் அடுத்த லெவெலுக்கு சென்றுள்ளார்  முகேஷ். விரைவில் டெஸ்ட் அல்லது ஒரு நாள் போட்டிகளில் கட்டாயம் இவர் அறிமுகம் நடக்கும். வாழ்த்துக்கள்.