Lifestyle | வாழ்க்கைமுறை
தண்ணீர் குடித்தால் நல்லது.. ஆனால் சுடுதண்ணீர் குடித்தால் வரும் நன்மைகள் தெரியுமா?
வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
வெந்நீர் குடிப்பதன் மூலம் நமக்கு பல நன்மைகள் மற்றும் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். தண்ணீர் குடித்த உடன் நமது உடல் வெப்பம் அதிகரித்து வியர்வை வெளியே சென்று விடும் அதனுடன் நச்சுத்தன்மை களும் வெளியேறிவிடும் இதனால் உடல் சுத்தமாகிறது. வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால் இன்னும் அதிக பலன்கள் கிடைக்கும்.
தொடர்ந்து வெந்நீர் குடித்து வந்தால் முகம் பொலிவுடன் இருக்கும் மற்றும் பருக்கள் வராது. இதன்மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கும், ரத்த ஓட்டம் சீராகும், நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் தேங்கி உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைக்கப்பட்டு விடும்.
மதிய உணவு அருந்திய பின் சிறிது நேரம் கழித்து ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் வெகுவிரைவில் உணவு செரிமானம் ஆகிவிடும்.
இது மட்டுமல்லாமல் வெந்நீருடன் எலுமிச்சை சாறை பிழிந்து தினம்தோறும் அருந்தி வந்தால் உடம்பில் உள்ள கொழுப்பு மற்றும் தொப்பை குறைந்து உடல் தோற்றம் மெருகேறும். மாதவிடாயின் போது அடிக்கடி வெந்நீர் குடித்து வந்தால் அதனால் ஏற்படும் வலிகள் குறையும்.
உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் தான் நமக்கு வயதான தோற்றத்தை அளிக்கிறது முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கு வெண்ணிற தினம்தோறும் அருந்தி வந்தால் இளமையாகவே இருக்கலாம்.
