Lifestyle | வாழ்க்கைமுறை
மோர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.. கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்
நம் உடம்பில் மோர் செய்யும் ஆச்சர்ய வேலைகள்..
மோர் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் உடல் உஷ்ணம் குறையும்
தற்போது கோடை காலம் தொடங்கும் நேரத்தில் நமக்கு எளிதாகவும் விரைவாகவும் கிடைக்கும் முக்கியமான ஒரு மருந்து என்றே கூறலாம் ஒரு பணம் மோர். இது உடலுக்கு ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் தரக்கூடியது மட்டுமல்லாமல் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மளை சீராக வைத்துக் கொள்ளும்.
உடலுக்கு குளிர்ச்சி தரும் பதநீர், இளநீர் மற்றும் மோர் ஆகியவை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு குடித்து உடல் நலத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். மோர் குடிப்பதால் உடல் எடை குறையும், மேலும் இதன் மூலம் தோல் நோய்கள் எதுவும் வராமல் பாதுகாக்க முடியும் மருத்துவ குணங்களுடன் முறை பயன்படுத்தி முக்கிய நீர் ஆதாரமாக குடித்து வரவேண்டும்.
தினமும் மோர் அருந்தி வந்தால் நமது உடல் எடை குறைவது மட்டுமல்லாமல் கெட்ட கொழுப்புகளையும் அது அகற்றி விடும் என்பதே மருத்துவர்களால் ஆராய்ச்சி செய்து உறுதி செய்யப்பட்டது. எப்படி என்றால் உப்பு தண்ணீர் தயிர் மற்றும் சில மசாலா பொருட்கள் மல்லி இலை போட்டு செய்துவிடலாம். இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவதற்கு சிறப்பானதாகும்.
தலைவாழை போட்டு சாப்பிடும் அனைத்து பிரியர்களுக்கும் இறுதியில் மோர் ஊற்றி செரிமானத்திற்கு ஏற்றவாறு நமது தமிழர் பண்பாடாகும். ஆகையால் தினமும் மோர் குடிப்பது மூலம் பருமனை குறைத்து தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கலாம்.
