புதுடெல்லி: ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் அதிக கோடிக்கு ஏலம் போன ஒட்டு மொத்த தொகைக்கும் ஒரே கேட்சில் ஒர்த் என புனே வீரர் பென் ஸ்டோக்ஸ் நிரூபித்துள்ளார்.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் டெல்லியில் நடக்கும் 55வது லீக் போட்டியில், புனே, டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ வென்ற டெல்லி அணி கேப்டன் ஜாகிர் கான், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

அதிகம் படித்தவை:  ரஜினிகாந்தின் காலா First look போஸ்டரில் அம்பேத்கர் பற்றிய குறியீடு

டெல்லி அணியில் கார்லோஸ் பிராத்வெயிட்டுக்கு பதிலாக நதீம் சேர்க்கப்பட்டார். இதே போல, புனே அணியில், சொந்த ஊருக்கு பறந்த இம்ரான் தாகிருக்கு பதிலாக, ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா இடம் பிடித்தார்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. இதில் டெல்லி அணி வீரர் முகமது ஷமி, கடைசி நேரத்தில் சிக்சருக்கு அனுப்பிய பந்தை புனே வீரர் பென் ஸ்டோக்ஸ், பவுண்டரி லைனில் அழகாக தடுத்தார். அதோடு, அப்படியே பந்தை மீண்டும் மைதானத்துக்குள் தூக்கி எறிந்த ஸ்டோக்ஸ், அதை அசால்டாக கேட்ச் பிடித்து மிரட்டினார்.