இந்த வாரம் கிரிக்கெட் உலகையே புரட்டிப்போட்ட சம்பவம் என்றால், அது இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் பென் ஸ்டோக்சின் அடிதடி சமாசாரம் தான். மேற்கு இந்திய தீவுகள் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ளனர்.

ஞாயிறு அன்று மூன்றாவது ஒரு நாள் போட்டி முடிந்ததும்  பார்ட்டி பண்ணும் நோக்கத்துடன் பல வீரர்கள் சென்றுள்ளனர்.பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், மற்றும் கமென்டரி டீமில் உள்ள ஜாக் பால், ஜேம்ஸ்ஆண்டர்சன் ஆகியோர் மது அருந்த சென்றுள்ளனர். நள்ளிரவுக்கு பின்னும்  ஸ்டோக்ஸ் மற்றும் ஹேல்ஸ் மது அருந்தி உள்ளனர்.

திங்கள் விடியற்காலை சுமார் இரண்டரை மணி போல் அடிதடி  சம்பவம் நடந்துள்ளது. பிரிஸ்டல் நகரில் பப்பிற்கு வெளியே நடந்த சம்பவத்தாலயே இந்த கைது நடவடிக்கை. கைது செய்யப்பட்ட பென் ஸ்டோக்ஸ், பின் ரிலீஸ் செய்யப்பட்டார். தானாகவே முன்வந்த ஹேல்ஸ் போலீஸ் விசாரணையில் பங்கேற்று தன்னுடையது மற்றும், தன் நண்பனின் வாதங்களை முன்வைத்தார். இந்த சண்டையில் ஸ்டோக்ஸ்ற்கு விரலில் பிராக்சர் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தசம்பவத்தால் தான் மிகவும் வருத்தமாக உள்ளதாகவும், மனமுடைந்ததாகவும் ஸ்டோக்ஸ் தெரிவித்தார். புதன் அன்று அறிவிக்கப்பட்ட ஆஷஸ் விளையாடும் அணியில் பென் ஸ்டோக்ஸ் பெயரும் இடம்பெற்றது.

மேலும் பிரபல நாளிதழான “தி சன்” இந்த சம்பவத்தின் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது.

“பென் ஸ்டோக்ஸ் மூர்கத்தனமாக இரண்டு நபர்களை தாக்குவது இந்த வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது. ஒரு நிமிடத்தில் சுமார் 15  முறை மூர்க்கமாக தாக்கியுள்ளார். பாட்டில் கொண்டு அடிக்கவந்தவரையும் அடித்து தரையில் தள்ளி குத்துவது, தெளிவாக தெரிகிறது. அவர் அருகில் நின்று, இதை தடுக்க ஹேல்ஸ் முயற்சி செய்ய்வதும் இந்த வீடியோவில் தெரிகிறது.”

இந்த இரண்டு வீரர்களையும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். போலீஸ் விசாரணை முடிந்து முழு ரிப்போர்ட் வந்த பின் தான் இங்கிலாந்து போர்டு என்ன முடிவு எடுக்கும் என்பது தெரியவரும். ஆஷஸ் தொடர் ஆரம்பிக்கும் முன் ஸ்டோக்ஸ் குணம் அடைவாரா, அப்படியே பிட் ஆனாலும் அணியில் விளையாட முடியுமா?  போர்டு ஒழுங்கு நடவடிக்கை  என்ற பெயரில் இவருக்கு என்ன தண்டனை கொடுக்கும் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள்.

சினிமா பேட்டை கிசு கிசு: பப் வெளியில் இரண்டு  கே (gay) நண்பர்களை கலாய்த்த அந்த கும்பலை  தான் பென் ஸ்டோக்ஸ் தாக்கினார் . முதலில் வாக்குவாத்தில் ஆரம்பித்த அந்த சம்பவம் பின் தான் கைகலப்பில் முடித்தந்து என்று கூறுகின்றனர் ஒரு தரப்பின்னர்.

image & photo credits- THE SUN