Tamil Cinema News | சினிமா செய்திகள்
வடசென்னை என்னை இம்ப்ரெஸ் செய்யவில்லை – சோலோ, டேவிட் பட இயக்குனர். கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்.

ஹிந்தியில் ஷைத்தான், வாசிர்; தமிழ் மற்றும் ஹிந்தியில் டேவிட்; தமிழ் மற்றும் மலையாளத்தில் சோலோ படங்களை இயக்கியவர். மணிரத்தினதுடன் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் இணைந்து கிரெய்டிவ் இயக்குனராக பணியாற்றியவர். இவர் தான் தன் ட்விட்டரில் வடசென்னை பற்றிய எதிர்மறையான கருத்தை பதிவிட்டுள்ளார்.
வடசென்னை என்னை இம்ப்ரெஸ் செய்யவில்லை. அருமையான கதைக்களம் , ஆனால் சொல்லியவிதம் சரியாக அமையவில்லை. நிறைய விஷயங்களை திணிக்க பார்த்துள்ளனர்.
உடனே கமெண்டில் பல எதிர்மறையான பதிவிட ஆர்மபித்தனர் பலர். சிலருக்கு பதிலும் தந்தார் நம்பியார். பலர் உங்கள் படம் யாருக்கும் புரிவதில்லை என்றனர். வேறு சிலரோ ஒரு இயக்குனராக இருந்து ஏன் உங்களுக்கு புடிக்கவில்லை என கேள்விகள் கேட்டனர். சிலருக்கு பதிலும் தந்தார்.
நான் வெற்றிமாறனின் ரசிகன். எனக்கு படம் பிடிக்கவில்லை, வெறுக்கிறேன் என்று சொல்லவில்லை, என்னை படம் அதிகமாக ஈர்க்கவில்லை என்று தான் சொன்னனேன். மேலும் படத்தில் அனைவரும் அருமையாக நடித்துள்ளனர்.
சினிமாபேட்டை காமெண்ட்ஸ்
இவர் படம் போலவே, இவரின் டீவீயின் அர்த்தம் மற்றும் விளக்கமும் கூட நமக்கும் புரியவில்லை என்றே தான் சொல்லவேண்டும்.
என்னவோ சில நேரங்களில் சில மனிதர்கள்.
