Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் சூரி இடம் பெற இதுதான் காரணமா? வாயால் கெடும் வைகைப்புயல்
தமிழ் சினிமாவில் என்னதான் சூரி, யோகி பாபு ஆகியோர் பெரிய காமெடியன்கள் என மனதை தேற்றிக் கொண்டாலும் உண்மையாகவே தமிழ்சினிமாவில் நகைச்சுவை செய்யக்கூடிய நடிகர்கள் காணாமல் போய் ரொம்ப நாள் ஆகிவிட்டது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் காமெடியனாக முதல் முதலில் சிவா நினைத்தது வடிவேலுவை தான். அவரை வைத்துதான் காமெடி காட்சிகள் எழுதப்பட்டது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் வடிவேலு இடையே ஏற்கனவே ஒரு பிரச்சனை இருந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
ஆம். ஒரு பேட்டியில் ரஜினியின் ராணா திரைப்படத்தை, ராணாவாவது காணாவாவது என்று பேசிவிட்டார். அன்றிலிருந்து இருவருக்கும் இடையில் புகைய ஆரம்பித்துவிட்டது. ஆனால் சந்திரமுகி திரைப்படத்தில் இருவரும் சேர்ந்து செய்த அலப்பறை இன்றளவும் பேசப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.
அதனால்தான் தற்போது சிறுத்தை சிவா எவ்வளவு முயன்றும் வடிவேலுவை கமிட் செய்ய வேண்டாமென தலைவர் கூறிவிட்டார். இதனால் வருத்தத்தில் சிறுத்தை சிவா வேறு வழியே இல்லாமல் சூரியை ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.
இதற்கு முன் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரி நடித்த வேதாளம் திரைப்படத்தில் சூரியின் காமெடி சுத்தமாக எடுபடவில்லை என்பது அனைவரும் அறிந்த கதைதான்.
