கபாலி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் அறிமுக காட்சி நேற்று வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.இதில் ரஜினி மலேசிய சிறையிலிருந்து வெளியே வருவது போலவும், வெளியே வந்தவுடன் அவரிடம் 30 அப்பாவி தமிழர்கள் என்கவுண்டரில் சுடப்பட்ட செய்தியை சொல்வது போலவும் உள்ளது.

படம் வெளியாவதற்கு முன்னரே இப்படி லீக் ஆகியுள்ளது தமிழ் சினிமாதுறையில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விடியோ எங்கு யாரால் எடுக்கப்பட்டது? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவில் ரஜினிக்கு ஸ்பெஷலாக படத்தை திரையிட்டு காட்டியபோது தான் யாரோ அதை மறைந்திருந்து படமெடுத்து அப்லோடு செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி தயாரிப்பாளர் தாணு தற்பொழுது விசாரணை நடத்திவருகிறார்.