பைத்தியம் போல் உளறினேன்.. தியா மேனனின் பரிதாபத்திற்குரிய நிலமை!

Diya-menon-Cinemapettai.jpg
Diya-menon-Cinemapettai.jpg

10 வயதில் மலையாள சேனல்களில் தொகுப்பாளினியாக அறிமுகமான தியா மேனன், அதன்பிறகு முன்னணி தொலைக்காட்சிகளான சன் டிவியிலும், சன் மியூசிக்கிலும் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றார். பிறகு தியா சிங்கப்பூரை சேர்ந்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டு, தற்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் தியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சின்னத்திரை சீரியல் பிரபலம் விஜே சித்ரா குறித்த உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தியா மற்றும் விஜே சித்ரா இருவரும் நெருங்கிய நண்பர்கள். கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி அன்று விஜே சித்ராவின் மறைவு ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கும் திரை பிரபலங்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.

அத்துடன் இந்த தகவலை கேட்டதும் தியா ஷாக்கானதுடன், இது உண்மையாக இருக்கக் கூடாது என்று சித்ராவின் பெயரையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே பைத்தியம் போல் தனி அறையில் புலம்பியுள்ளார். சித்ராவிற்கு இப்படியெல்லாம் நடந்திருக்கக் கூடாது.

Vj-Diya-menon-Cinemapettai.jpg
Vj-Diya-menon-Cinemapettai.jpg

இதெல்லாம் உண்மையல்ல என்று சித்ராவின் உயிரற்ற உடலை நேரில் சென்று பார்க்கும் தைரியம் இல்லாமல், சித்ராவின் இறுதிச் சடங்கில் தியா கலந்து கொள்ளவில்லை. மேலும் சித்ராவின் நம்பரிலிருந்து ஒருமுறையாவது கால் வராதா என்றும் தியா பலமுறை ஏங்கி இருக்கிறாராம்.

சினிமாவில் பின்புலம் இல்லாமல் உலக அளவில் ரசிகர்களை பெற்ற சித்ரா, வேகவேகமா சாதித்துவிட்டு அவசர அவசரமாக உலகத்தை விட்டுப் போனது யாராலும் இதனை தாங்கி கொள்ள முடியவில்லை என்று தியா மேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பேசியுள்ளார்.

இவர் மட்டுமல்ல விஜே சித்ரா மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்து உள்ளதால் சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்களும் திரை பிரபலங்களும் தொடர்ந்து அவரை குறித்த செய்திகளை பதிவிட்டு நினைவு கூறுகின்றனர்.

Advertisement Amazon Prime Banner