fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யின் துப்பாக்கி படத்தை நிராகரித்த பிரபல நடிகர்.. இப்பொழுது வரை ஒரு ஹிட் கொடுக்க நீச்சல் அடிக்கிறார்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் துப்பாக்கி படத்தை நிராகரித்த பிரபல நடிகர்.. இப்பொழுது வரை ஒரு ஹிட் கொடுக்க நீச்சல் அடிக்கிறார்

தளபதி விஜயின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட படம் துப்பாக்கி. 2012ஆம் ஆண்டு தாணு தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவானது.

இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருப்பார், ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றே கூறலாம்.

முருகதாஸ் மற்றும் தளபதி கூட்டணியில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்த படம் வசூல் ரீதியில் பல சாதனைகளை முறியடித்தது. துப்பாக்கி படத்தின் மூலம் தான் ஸ்லீப்பர் செல் இந்த வார்த்தை இந்திய அளவில் பேசப்பட்டது. தீவிரவாத கூட்டத்துடன் ஒரு ராணுவ வீரர் போராடும் இந்த கதையை இந்திய அளவில் திரும்பி பார்க்கும் அளவிற்கு உருவாக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை  தொடங்குவதற்கு முன்னதாக அக்ஷய குமாரிடம் கதையை கூறியது அனைவரும் அறிந்ததே. ஆனால் தளபதி விஜய்க்கு முன்னதாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த சூர்யாவிடம் இந்த கதையை கூறினாராம்.

ஆனால் சூர்யாவால் அப்போது நடிக்க முடியாமல் போய்விட்டது. இன்றுவரை இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை இழந்துவிட்டோமே என்று சூர்யா கவலைப்பட்ட படங்களில் இதுவும் முக்கியமானது. அதுமட்டுமல்லாமல் தற்போது வரை இது போன்ற சூப்பர் ஹிட் கொடுக்க  முடியாமல் தவித்து வருகிறார்.

தளபதி விஜய் இந்தப் படத்தில் தரமாக செய்து விட்டதால் சூர்யாவை அந்த இடத்தில் வைத்துப் பார்ப்பது கடினம் தான்.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உறுதியாகி உள்ளது தளபதி மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் இணைகிறார். தளபதி விஜயுடன் இணைவதற்கு ஆசையாக உள்ளது என்று காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் தற்போது தளபதிக்கு இருக்கும் மார்க்கெட்டினால் காஜல் அகர்வால் நடிப்பது கேள்விக்குறி தான்.

மீண்டும் நயன்தாரா நடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த படத்தின் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறதாம். விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top