Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திருமணத்திற்கு முன் அது தவறில்லை: சர்ச்சை பட நாயகி யாஷிகா

திருமணத்திற்கு முன்னர் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு எதும் இல்லை என இருட்டு அறையில் முரட்டு குத்து பட நாயகி யாஷிகா தெரிவித்துள்ளார். மாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். கோலிவுட்டின் திரில் ஜானர்களின் வெற்றி பட வரிசையில் இருக்கும் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். 17 வயதில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவருக்கு இதுவரை நடிப்புக்கேற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை.

எல்லா நாயகிகள் போலும் யாஷிகா சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவ் மோடில் இருப்பவர். தமிழ் சினிமாவில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஆயிரம் கால் மண்டபம், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஆனால், யாஷிகாவிற்கு ரசிகர்களை உருவாக்கியது என்னவோ இருட்டு அறையில் முரட்டு குத்து படம் தான்.

அடல்ட் காமெடி பின்னணியில் ஹர ஹர மகா தேவகி படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியத்தில் உருவான படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. கௌதம் கார்த்தி நாயகனாக நடித்திருந்தார். ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்திற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் யாஷிகா படு கவர்ச்சியாக நடித்திருந்தார். படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையில் யாஷிகா தைரியமாக பேசக்கூடியவர் என அவரது நெருங்கிய வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்படுகிறது.

இந்நிலையில், திருமணத்திற்கு முன்னர் கன்னித்தன்மையை இழப்பது தவறெல்லாம் இல்லை என தடாலடியாக தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தன் சமூக வலைத்தள பக்கங்களிலும் யாஷிகா வெளியிடும் புகைப்படங்களும் கவர்ச்சி தூக்கலாகவே இருக்கிறது. அதிலும், சில வாசகங்கள் இரட்டை அர்த்தத்தில் இருப்பதாக நெட்டிசங்களே கொஞ்சம் பாத்துப்பா என்ற ரீதியில் கிசுகிசுக்க தொடங்கி இருக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top