அஜித்தின் பழைய படங்களில் ரசிகர்களால் மறக்க முடியாத நிறைய படங்கள் இருக்கிறது.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசிகர்களுக்கு ஸ்பெஷல். இன்று இதே நாளில் 15 வருடத்திற்கு முன் அஜித் நடித்த வில்லன் படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் இரண்டு வேடத்தில் நடித்து அஜித் அசத்தியிருப்பார்.

இந்தப் படத்தின் கதையை எழுதிய யூகிசேது, ‘அஜித் இப்போ மாஸ். அவரோட ரசிகர்கள் அவர் படத்தில் ரஜினி மாஸையும் எதிர்பார்க்கிறார்கள்; கமல் பெர்ஃபார்மன்ஸையும் விரும்புகிறார்கள்’ என்றார். ‘பக்கவாத’ நடை, கண்டக்டர் உடை என அஜித்தும் ரசிகர்களுக்கு வெரைட்டி விருந்து வைத்திருப்பார்!

இப்படத்தின் வசூல் கூட அமோக வரவேற்பை பெற்றது. வில்லன் படம் இன்றோடு 15 வருடத்தை எட்டியுள்ளதால் ரசிகர்கள் வழக்கம் போல் #15YrsOfBlockbusterVILLAIN என்ற டாக்கை கிரியேட் செய்து வருகின்றனர்.

ajith

அதோடு பாக்ஸ் ஆபிஸில் படம் என்னென்ன செய்துள்ளது என்ற விவரங்களையும் அந்த டாக்கில் ஷேர் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

அதை பார்ப்போமா இப்பொழுது.

 

அதிகம் படித்தவை:  சிம்புவிற்கு குவிந்த அஜித் ரசிகர்கள் ஆதரவு - படம் உள்ளே