Connect with us

Cinemapettai

நண்பனுடன் படுக்கை அறையில் மனைவி ஜாலி.. ரகசிய கேமரா வைத்து விவாகரத்து வாங்கிய கணவன்

bedroom

India | இந்தியா

நண்பனுடன் படுக்கை அறையில் மனைவி ஜாலி.. ரகசிய கேமரா வைத்து விவாகரத்து வாங்கிய கணவன்

பெங்களூரு: நண்பனுடன் படுக்கையில் அறையில் மனைவியாக ஜாலியாக இருப்பதை ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்த கணவன் அதை ஆதாரமாக காண்பித்து நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளார். கர்நாடகா உயர்நீதிமன்றம் விவாகரத்தை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த தம்பதிக்கு கடந்த 1991ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த ஜோடிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கு பணிபுரியும் ரமேஷின் நண்பர் ஒருவர் அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார்.

இதன் காரமணாக லட்சுமிக்கு ரமேஷின் நண்பருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் எல்லை மீறிய இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. நண்பருடன் கள்ளக்காதல் வைத்திருந்தை அறிந்த ரமேஷ் அடிக்கடி பிரச்சனை எழுப்பி வந்தார். அனால் லட்சுமி திட்டவட்டமாக மறுததார்.

இதனிடையே கடந்த 2001ம் ஆண்டு ஜுலை 4 முதல் ஜுலை 8ம் தேதி வரை பெங்க்ளூரு செல்ல திட்டமிட்டார். செல்லும் போது மனைவியை பொறி வைத்து பிடிக்க விரும்பிய ரமேஷ். தனது படுக்கை அறையில் ரகசிய கேமராவை பொறுத்தினார். அதில் நண்பரும் மனைவியும் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் பதிவானது.

இதையடுத்து வீடியோவை எடுத்துக்கொண்டு பல்லாரி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு ரமேஷ் மனு தாக்கல் செய்தார்.மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்விவாகரத்து வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து ரமேஷின் மனை லட்சுமி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில் தன்னை மற்ற ஆண்களோடு பாலியல் செயல்களில் ஈடுபட வைத்து வீடியோ எடுக்கும்பழக்கம் கணவருக்கு உள்ளதாக குற்றம்சாட்டினார். இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் ஏன் புகார் அளிக்கவில்லை என்று கூறியதுடன், விவாகரத்து வழங்கிய குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top