பாகுபலி’யால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் பட இயக்குனர் அட்லி மாறியுள்ளார் என்று கூறப்படுகிறது.

‘தெறி’ பட இயக்குனர் அட்லி தற்போது நடிகர் விஜய்யை வைத்து விஜய்யின் 61வது படத்தை இயக்கி வருகிறார். மேலும் இதற்கிடையில் இயக்குனர் அட்லி ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கின்றனர். படத்தை ஐக் இயக்குகிறார். இப்படத்தை வரும் 12ம் தேதி ரிலீஸ் செய்ய ஏற்பாடாகி வந்தது. முன்னதாக திகில் மற்றும் காமெடி கலந்த இப்படம் தணிக்கைக்கு சென்றபோது, அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கினர்.

யு சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் யு/ஏ சான்று கிடைத்தது அட்லிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘பாகுபலி 2’ திரைக்கு வந்து ஹவுஸ்புல் காட்சிகளாக பெரும்பாலான தியேட்டர்களை ஆக்ரமித்திருக்கிறது. இதனால் எதிர்பார்க்கும் அளவுக்கு தியேட்டர் கிடைப்பதில் அட்லிக்கு சிக்கல் ஏற்பட்டது. தான் தயாரித்த முதல்படம் பாகுபலி அலையில் மூழ்கிவிடக்கூடாது என்பதால் 12ம் தேதி வெளியிட இருந்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை வரும் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.