சிவகார்த்திகேயன் கேரியரிலேயே இல்லாத கலெக்ஷனை கொடுத்தது அமரன் படம் .இதுவரை 320 கோடிகள் வசூலித்து சாதனை செய்துள்ளது. ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடித்து வந்தார் சிவ. அப்பொழுதும் கூட அமரன் படத்தின் டச் வேலைகளுக்காக மீண்டும் அங்கே சென்று வந்தார்.
இதனாலையே ஏ ஆர் முருகதாஸ் படத்திற்கு தொய்வு விழுந்தது. அமரன் படத்தில் முற்றிலும் வேறு கெட்ட, முருகதாஸ் படத்திற்கு வேறு கெட்டப். .அமரன் படத்திற்கு சென்று வருவதால் தன் படம் பாதிக்கும் என்பதால் முருகதாஸ் இதற்கு நிறைய முட்டுக்கட்டைகள் போட்டு வந்தார்.
ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் முருகதாஸ் படப்பிடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டு அமரன் பட புரமோஷனுக்காக சென்று விட்டார். இதனால் முருகதாஸும் இந்த படத்தில் இருந்து பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து இயக்கும் “சிக்கந்தர் படத்திற்கு” சென்றுவிட்டார்.
சிக்கந்தர் படம் மார்ச் இறுதியில் தான் முடிகிறதாம். அப்படியானால் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இருக்கிறது என்று சிவகார்த்திகேயன் சிபிச் சக்கரவர்த்திக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் முருகதாஸ் வருவதற்குள் சிபி சக்கரவர்த்தியுடன் இணைந்து இந்த படத்தை முடித்து விடலாம் என திட்டம் போட்டுள்ளார் சிவா.
இப்படி பல டிராக்குகள் மாறுவதால் சுதா கொங்காராவுடன் கமிட்டாகியுள்ள புறநானூறு படம் என்ன ஆனது என்பதுதான் அனைவரின் கேள்வியும். சுதா கொங்காராவின் புறநானூறு படத்தை சீக்கிரம் முடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி, முருகதாஸ் என ஏகப்பட்ட இயக்குனர்களை கமிட் செய்து வைத்திருக்கிறார்.