தமிழகத்தில் அழகான பெண்கள் அதிகம் வசிக்கும் ஊர் எது என சென்னை லயோலா கல்லூரி தமிழகம் முழுவதும் கருத்து கணிப்பு நடத்தியது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சில தனித்தன்மை இருக்கும். உணவு,பழக்க வழக்கம், பேச்சு வழக்கு இப்படி ஏதாவது ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் புதிதாக லயோலா கல்லூரி வித்தியாசமாக எந்த மாவட்டத்தில் அழகான பெண்கள் அதிகமாக உள்ளனர் என்று ஒரு சர்வே நடத்தினர்.

இதில் வெறும் முகவழகை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவர்களின் அறிவு,படிப்பு, உடையணியும் விதம் மற்றும் முகம்,உடல் அழகு என்று சில அடிப்படை விஷயங்களை எடுத்துக்கொண்டு சர்வே செய்தனர்.

அந்த கருத்து கணிப்பு முடிவு அறிவிக்கப்பட்டது. அதில் அழகான பெண்கள் அதிகம் வசிப்பதில் ஈரோடு முதலிடத்தை பிடித்தது தெரியவந்தது. இந்த முடிவு அறிந்த ஈரோடு பெண்கள் மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தனர்.

இந்த முடிவால் பிற மாவட்டங்களில் அழகான பெண்கள் இல்லை என்று அர்த்தம் அல்ல. மேற்கண்டுள்ள சில அடிப்படை விஷயங்களை எடுத்துக்கொண்டு செய்துள்ளதால் வந்துள்ள முடிவே இந்த சர்வே.