சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்னர் கறுப்பு நிறத்தில் 3 பெண்கள் தமிழ் கலாச்சார அடையாளங்களுடன் பாவாடை தாவணியில் இருக்கும் போட்டோ தற்போது வைரலாக பரவி வருகின்றது.

கருப்பு நிறம் இருப்பவர்களுக்கென்று தனிப்பட்ட ஒரு முகநூல் பக்கத்தை உருவாக்கி அதில் உலகத்தில் யாரேல்லாம் கறுப்பாக இருக்கின்றார்களா அவர்களின் போட்டோவை பதிவிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த முகநூல் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருப்பு நிற அழங்காரத்தில் 3 பெண்கள் தமிழ் கலாச்சார அடையாளங்களுடன் கூடிய தாவணி, பாவாடை மற்றும் மூக்குத்தி, ஜிமிக்கி போன்றவற்றை அணிந்து போட்டோ வெளியிட்டுள்ளனர்.

அந்த போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. ஆனால் அந்த 3 பெண்களும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பன பற்றி தகவல் தெரியவில்லை.