இணையத்தில் பட்டையைக்கிளப்பும் பிரபாஸின் ராதேஷ்யாம் பட மோஷன் போஸ்டர்.. 400 கோடினா சும்மாவா!

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கு தற்போது சுக்கிர திசை நடந்து கொண்டிருக்கிறது போல.

பாகுபலி படங்களுக்குப் பிறகு உலகம் முழுவதும் பிரபாஸ் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.

சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பட்டையைக் கிளப்பியது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அதனைத் தொடர்ந்து பிரபாஸ் படங்களின் வசூலைவிட படத்தின் பட்ஜெட்டும் தாறுமாறாக இருந்து வருகிறது.

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கும் ராதே ஷ்யாம் என்ற காதல் காவியம் கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.

தற்போது ராதேஷ்யாம் படத்தின் காதல் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் செம வைரல் ஆகி விட்டது.