தமிழகத்தில் விட்டதை அமெரிக்காவில் பிடித்த பீஸ்ட்.. சாதனைக்குச் சொந்தக்காரர் தான் விஜய்

இரண்டு நாட்களுக்கு முன்பு தளபதி ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த நெல்சன் திலீப்குமார் இயக்கிய, தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் திரையரங்கில் உலகெங்கும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் என்னதான் பீஸ்ட் திரைப்படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட் வந்து கொண்டிருந்தாலும் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட முதல் நாளில் நடத்தப்படும் ப்ரீமியர் காட்சிகளுக்கான வரவேற்பில் சாதனை புரிந்திருக்கிறது.

இதேபோன்று ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த  கபாலி திரைப்படம் சுமார் 19 லட்சம் டாலரை வெளியிட்ட முதல் பிரீமியர் காட்சிகளில்  வசூல் சாதனை புரிந்தது  இதுவரை திரையிடப்பட்ட படங்களை எல்லாம் தோற்கடித்து முதல் இடத்தை பிடித்தது.

அதேபோன்று தற்போது பீஸ்ட் திரைப்படமும் 6 லட்சம் டாலரை வசூல் செய்து இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.0 மூன்றாம் இடத்தையும், பேட்ட 4-ஆம் இடத்தையும், காலா ஐந்தாம் இடத்தையும்  பெற்றுள்ளது.

இதைப்போன்று  தர்பார் 6-ஆம் இடத்தையும், அண்ணாத்த 7-ஆம் இடத்தையும், லிங்கா  8-ஆம் இடத்தையும்  பெற்றிருக்கிறது.  அத்துடன் இளையதளபதி விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் இந்த வரிசையில் 9வது இடத்தையும்,  சர்க்கார் 10-ஆம் இடத்தையும் பெற்றிருக்கிறது.

ஆகையால் அமெரிக்காவில் திரையிடப்பட்ட தமிழ் படங்களில் தளபதியும் சூப்பர் ஸ்டாரும் வேறு எந்த தமிழ் நடிகர்களின் படங்களையும் உள்ளே விடாமல் டாப்-10 இடங்களையும்  தங்களுக்குள்ளே பகிர்ந்துகொண்டு  அங்கிருக்கும் ரசிகர் பட்டாளத்தை பெருக்கி உள்ளனர் என்பதை  இதன் மூலம்  தெரியவந்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்