விஜய்யின் “பீஸ்ட்” படக்கதை உருவப்பட்டது இங்கிருந்துதான்.. ஹாலிவுட் ஸ்டைலுன்னு சொல்லும்போதே டவுட் வந்துச்சு

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள் இன்று வரை இணையதளத்தை ஆட்சி செய்து வருகிறது. அந்த அளவுக்கு அந்த போஸ்டர் விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் உருவாக்கும் போஸ்டரை விட அதிகாரப்பூர்வமாக வெளிவரும் போஸ்டர்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

இதை விஜய் ரசிகர்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். போட்டோ டிசைனர் கோபி பிரசன்னா 7வது முறையாக விஜய்யின் படத்திற்கு போஸ்டர் ரெடி செய்து கொண்டிருக்கிறார். இவரின் முந்தைய படங்களின் போஸ்டர்களும் இப்படித்தான் விமர்சனம் செய்யப்பட்டது.

உண்மையாலுமே பீஸ்ட் பட போஸ்டர் வெளியான பிறகு ரசிகர்கள் கைவண்ணத்தில் உருவான வெவ்வேறு போஸ்டர்கள் இணையத்தை மிரள விட்டன. அடுத்த முறை படக்குழுவினர் தயவுசெய்து விஜய் ரசிகர்களிடம் போஸ்டர் பணியை ஒப்படைத்தால் நல்லது.

இது ஒருபுறமிருக்க தளபதி 65 படம் எப்படி இருக்கப் போகிறது என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. படத்தில் சண்டை பயிற்சியாளராக பணிபுரியும் அன்பறிவு என்பவர்கள் 90% ஆக்ஷன் படம் என குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல் பீஸ்ட் படம் ஹாலிவுட் லெவலில் இருக்க வேண்டும் என நெல்சன் விடாப்பிடியாக இருக்கிறாராம். இதனால் அந்த படத்தை எப்படி எடுக்கலாம் என்பதற்காக பல ஜேம்ஸ்பாண்ட் படங்களை போட்டு போட்டு பார்த்துள்ளார். போட்டு போட்டு பார்த்ததில் இந்த இந்த காட்சிகள் நன்றாக இருக்கிறது என எழுதியபோது அதுவே ஒரு கதையாக மாறிவிட்டதாம்.

தற்போது அதைத்தான் பீஸ்ட் என்ற பெயரில் உருட்டிக் கொண்டிருக்கிறார்கள் என இப்போதே கோலிவுட்டில் கதையை கட்டிவிட்டார்கள். வழக்கம்போல விஜய்யின் இந்த படமும் திருட்டு கதையா என கேலி கிண்டல்கள் சமூக வளைதளத்தில் தொடங்கிவிட்டது.

beast-cinemapettai
beast-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்