பீஸ்ட் படத்திற்கு ரிலீஸ் தேதி குறித்த சன் பிக்சர்ஸ்.. டபுள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

கடந்த சில வருடங்களாக தியேட்டர்கள் சரியான முறையில் திறக்காததால் நிறைய முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸாக முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இதில் சூர்யா போன்ற சில நடிகர்கள் நேரடியாக தங்களது படங்களை ஓடிடி தளங்களுக்கு கொடுத்ததும் ஞாபகம் இருக்கலாம்.

ஆனால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக கருதப்படும் சூர்யா தொடர்ந்து அமேசான் தளத்திற்கு ஆதரவளித்து வருவது தியேட்டர்காரர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. சூரரைப் போற்று படத்தோடு மட்டுமல்லாமல் மேலும் நான்கு படங்களை தயாரித்து நான்கையும் அமேசான் தளத்தில் கொடுத்துவிட்டார்.

இதேபோல் மற்ற நடிகர்களும் போய் விடுவார்களா என்ற நேரத்தில்தான் விஜய் தன்னுடைய மாஸ்டர் படத்தை தியேட்டரில் களமிறங்கிய தியேட்டர்காரர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். மாஸ்டர் படமும் செம வசூலை அள்ளியது.

அதனைத் தொடர்ந்து அஜித்தின் வலிமை, ரஜினியின் அண்ணாத்த, கமலின் விக்ரம், விக்ரமின் மகான், கோப்ரா போன்ற படங்கள் அனைத்துமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரையரங்கில் வெளியாகும் என்பதுதான் தற்போதைய கேள்வி குறி.

அந்த வகையில் மிகப் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு திரைப்படம்தான் பீஸ்ட். விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி 2022 பொங்கல் என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்து விட்டதாம்.

தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களை ஒரே நேரத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அதில் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த என்றால் அடுத்த பொங்கலுக்கு விஜய்யின் பீஸ்ட் கன்ஃபார்ம் என்கிறது சன் வட்டாரங்கள்.

beast-cinemapettai-01
beast-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்