பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் என்ன தெரியுமா? இதைத்தான் எதிர்பார்த்தோம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரித்து கொண்டிருக்கும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் வரலாற்றில் இதுதான் அதிக பட்ஜெட் படமாம்.

முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடந்தது. அதனைத் தொடர்ந்து சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் தளபதி விஜய்யுடன் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அனிருத் இசையில் சமீபத்தில் ஒரு பாடல் சென்னையில் படமாக்கப்பட்டது.

சன் பிக்சர்ஸ் கேட்காமலேயே பீஸ்ட் படத்தின் தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் எந்த அப்டேட் கொடுக்க போகிறது? என்ற தகவல் கசிந்துள்ளது.

தற்போதைக்கு விஜய் மற்றும் பூஜா ஹெக்டே மட்டுமே படத்தில் உள்ளது அனைவருக்கும் தெரியும். அடுத்ததாக விஜய்க்கு வில்லன் யார்? என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்களாம்.

படத்திற்கு பீஸ்ட் என்ற தலைப்பை வைத்ததால் கண்டிப்பாக படம் 90% ஆக்சன் படம் என்பதை படக்குழுவினர் தெரிவித்துவிட்டனர். அதற்கு தகுந்தார்போல் வில்லன் சரியாக அமைந்தால் தான் படம் சிறப்பாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் வில்லன் யார்? என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றனர்.

beast-cinemapettai-01
beast-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்