புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

விமர்சன ரீதியாக வலிமை காட்டிய பயம்.. பீஸ்ட் படத்தில் நெல்சன் செய்த மாற்றம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சமீபகாலமாக விஜய்யின் படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பிறகு பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இப்படம் ஒருவழியாக சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு யூ ஏ சான்றிதழ் பெற்றது. தற்போது பீஸ்ட் படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்திற்கு போட்டியாக பிரம்மாண்ட கேஜிஎப் 2 படமும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் வலிமை படம் வெளியாகியிருந்தது. இப்படத்தை பார்ப்பதற்கு பொறுமை வேண்டும் மிகவும் சுவாரஸ்யம் இல்லாமல் உள்ளதாகவும், படம் 3 மணி நேரம் இருந்ததால் ஜவ்வாக இழுப்பது போல இருந்ததாக எதிர்மறையான விமர்சனங்கள் வெளியானது.

இதைக் கருத்தில் கொண்டு பீஸ்ட் படத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. பீஸ்ட் படமும் ஆரம்பத்தில் கொஞ்சம் நீளமாக( 2 மணிநேரம் ஐம்பத்தி ஐந்து நிமிடம் ) தான் இருந்துள்ளது. இந்நிலையில் வலிமை படத்தின் விமர்சனத்தால் பீஸ்ட் படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளது. படத்தின் நீளத்தை குறைத்தால் படம் பாதி வெற்றி என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றன.

இதனால் பீஸ்ட் படம் 2 மணிநேரம் 35 நிமிடம் அல்லது அதற்கு குறைவான நேரத்தில் தான் இருக்கும் என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சில படங்களில் ஐந்து முதல் ஆறு பாடல்கள் என பாடல்களுக்கே அரை மணி நேரம் போய்விடும். ஆனால் பீஸ்ட் படத்தில் பாடல்களே இல்லையாம்.

அதுவும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தைப் போல் பீஸ்ட் படத்திலும் படம் முடிந்த பிறகு தான் பாட்டு வருகிறது என கூறப்படுகிறது. இதனால் பீஸ்ட் படத்தில் இந்த இரண்டரை மணி நேரமும் முழுவதும் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் படத்தின் ரிலீஸுக்காக விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Trending News