Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல OTT தளத்திற்கு விற்கப்பட்ட பீஸ்ட்.. இப்பவே கல்லா கட்டும் தயாரிப்பாளர்!

beast-poster

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கின்றது பீஸ்ட் திரைப்படம். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின் தளபதி விஜய் கிட்டதட்ட 100 கோடி சம்பளத்தில் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

தளபதியின் பிறந்தநாளையொட்டி இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் முடிந்து இருக்கும் இந்த சூழ்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்தபின் சென்னையில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலக புகழ்பெற்ற நெட்ஃபிக்ஸ் தளத்தில் பீஸ்ட் படத்தை விற்று விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தளபதி படம் என்றாலே கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளிவரும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதேபோல் வரும் 2022 பொங்கலுக்கு பீஸ்ட் திரைப்படம் வெளிவர உள்ளது.

அதற்குப் பின்னர் நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் வெளிவர உள்ளது. உலக அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள தளபதி விஜயின் படம் கண்டிப்பாக தியேட்டரில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

vijay-nelson-thalapathy65

vijay-nelson-thalapathy65

Continue Reading
To Top