ஆன்லைனில் பக்கா பிரிண்டில் கசிந்த பீஸ்ட்.. இணையதளத்தை அலசி ஆராயும் ரசிகர்கள்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜயின் 65-வது படமான பீஸ்ட் திரைப்படம் நேற்று திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்களின் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் வெளியான முதல் நாளிலேயே ஏகப்பட்ட பிரச்சினையை வரிசையாக சந்தித்துக் கொண்டிருக்கிறது.

முதலில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு ஒரு சில மாவட்டங்களில் திரையிடப்பட முடியாத நிலை ஏற்பட்டது. பொதுவாகவே விஜய் திரைப்படம் என்றாலே இதெல்லாம் நடப்பது சகஜம்தான்.

அதைத்தொடர்ந்து தற்போது பீஸ்ட் திரைப்படத்திற்கு கடும் போட்டியாக ராக்கிங் ஸ்டார் யாஷ் உடைய கேஜிஎஃப் 2 திரைப்படமும் இன்று ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாக பீஸ்ட் படத்தை பதம் பார்த்து வருகிறது.

இதுவும் பத்தாமல் தற்போது பீஸ்ட் திரைப்படம் சினிமா படங்களை பதிவிறக்கம் செய்யக்கூடிய ஒரு சில பைரசி இணையதளங்களில் பக்கா பிரிண்டில் வெளியாகி விட்டது. இதனால் படத்தை தியேட்டரில் வந்து பார்க்காமல் ஆன்லைனிலேயே பார்க்கத் துவங்கிவிட்டனர்.

ஆகையால் பீஸ்ட் படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் அனைத்திலும் ஆள் இல்லாமல் காற்று வாங்குகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு ஆன்லைனில் பீஸ்ட் படத்தை பார்க்காமல் தியேட்டரில் வந்து பார்க்கும்மாறு  சமூகவலைதளங்களில் கெஞ்சிக் கூப்பாடு போடுகின்றனர்.

மேலும் ஒரு சில தியேட்டர்களில் மிகச் சொற்ப அளவிலான ரசிகர்கள் மட்டுமே அமர்ந்து பார்ப்பதை வீடியோ எடுத்து அதையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர். இவ்வாறு விஜய் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது திருவிழா போல கொண்டாடுவதும், அதன்பிறகு ஆன்லைனில் வந்தபிறகு திரையரங்கே காற்று வாங்குவதும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் வேதனையை அளிக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்