Connect with us
Cinemapettai

Cinemapettai

valimai-ajith-beast-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வலிமை 300 கோடி, பீஸ்ட்க்கு இத்தனை கோடியா? ரிலீஸுக்கு முன்னரே சக்கை போடு போடும் அஜித், விஜய்

பல வருட காத்திருப்புக்கு பலனாக வலிமை திரைப்படம் இன்னும் சில நாட்களில் ரசிகர்களுக்கு விருந்தாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனால் இந்த படத்தை கொண்டாட அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ, ட்ரைலர், பாடல்கள் என்று அனைத்தும் வெளியாகி ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல் தற்போது வலிமை திரைப்படம் பல சாதனைகளை புரிந்து வருகிறது.

அதாவது உலக அளவில் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படம் சுமார் 300 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது. இதுவரை வெளியான எந்த திரைப்படங்களும் இதுபோன்ற ஒரு வியாபார சாதனையை நிகழ்த்தியது இல்லை என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மிகவும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வலிமை படத்தின் ஒரு சாதனையை விஜய்யின் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படம் முறியடித்துள்ளது. அதாவது நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியிருக்கும் அரபிக் குத்து என்ற பாடல் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

ஏற்கனவே இந்தப் பாடல் உருவாகும் ஒரு காமெடி வீடியோ வெளியாகி ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது. இதனால் இந்த பாடலை எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே அதிக அளவு பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் இந்தப் பாடலை பல பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பாடல் அஜித்தின் வலிமை படத்தின் முதல் சிங்கிள் பாடல் நிகழ்த்திய சாதனையை முறியடித்துள்ளது.

இதனால் பீஸ்ட் திரைப்படம் வலிமை திரைப்படத்தை விடவும் அதிகமாக 500 வரை வியாபாரம் ஆகும் என்ற கருத்து நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பீஸ்ட் திரைப்படத்தை ஹிந்தியில் 1000 தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Continue Reading
To Top