பீஸ்ட் பட பிரபலத்துக்கு கொக்கி போட்ட ஷங்கர்.. 18 வருஷத்துக்கு முன்னாடி கூட்டத்தோடு கூட்டமாய் இருந்தவர்

சமீபகாலமாக உருவாகும் பெரிய படங்கள் அனைத்திலும் குறிப்பிட்ட சில முக்கிய பிரபலங்களே அதிகம் பணியாற்றி வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட ரசிகர்களிடம் அவர்கள் வரவேற்ப்பை பெறும் போது அவர்களுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைப்பது சகஜம்தான்.

அந்த வகையில் அடுத்த பிரமாண்ட படமாக உருவாக இருப்பது சங்கர் மற்றும் ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படம் தான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர்.

ஷங்கரும் பல பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது சுறுசுறுப்பாக இந்த படத்தை இயக்க களம் இறங்கிவிட்டார். மேலும் ஷங்கரின் புதிய படத்தில் நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் போன்ற தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே பிரபலமான ஜானி மாஸ்டர் என்பவருக்கு தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளாராம் ஷங்கர். தெலுங்கில் அவர் முன்னணி நடன இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுன் நடித்த அலவைகுண்டபுரம்லோ படத்தில் அவர் நடனம் அமைத்த புட்ட பொம்மா பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது சொல்லி தெரியவேண்டியதில்லை. மொழி தெரியாதவர்களுக்கு கூட அந்த பாடல் எளிமையான நடனம் மூலம் ரசிக்க வைத்தது .

அதில் இம்ப்ரஸ் ஆன விஜய் பீஸ்ட் படத்தில் வழிய போய் வாய்ப்பு கொடுத்ததாகக் கூறுகின்றனர். இவர் சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக குரூப் டான்ஸராக இருந்தவர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. இன்று அவரது படத்திற்கு தலைமை மாஸ்டராக இருப்பது பெருமை என குறிப்பிட்டுள்ளார்.

johny-master
johny-master
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்