நெகட்டிவ் விமர்சனங்களை சுக்குநூறாக்கிய விஜய்.. ஐந்தே நாளில் பீஸ்ட் செய்த வசூல் சாதனை!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்த திரைப்படம் வெளியான பின்பு பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. படம் சுமாராகத்தான் இருக்கிறது என்று அனைத்து தரப்பினரும் கூறி வந்தனர்.

இது படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறாது என்றும் இது ஒரு தோல்வி படமாகத்தான் இருக்கும் என்றும் பலரும் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்தனர். ஆனால் அதை எல்லாம் பின்னுக்குத்தள்ளி பீஸ்ட் திரைப்படம் முதல் நாள் வசூலிலேயே மாஸ் காட்டியது.

இதுவரை எந்த திரைப்படத்திலும் இல்லாத அளவுக்கு இந்த திரைப்படம் முதல் நாளில் அதிக அளவு வசூலை வாரி குவித்தது. எவ்வளவு நெகடிவ் விமர்சனங்கள் படத்தைப் பற்றி வந்து இருந்தாலும் திரையரங்குகளில் இப்படத்தினை காண ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

மேலும் இப்படம் வெளியான சமயத்தில்தான் பான்இந்தியா திரைப்படமான கேஜிஎஃப் 2 படமும் வெளியாகியிருந்தது. இதுவும் பீஸ்ட் திரைப்படத்தின் வசூலை பாதிக்கும் என்ற நிலையும் இருந்தது. ஆனால் அதை எல்லாம் தகர்த்தெறிந்து பீஸ்ட் திரைப்படம் ஐந்து நாளில் தற்போது வரை 200 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

படம் வெளியான வெறும் ஐந்து நாட்களில் இவ்வளவு பெரிய வசூலை பெற்றிருப்பதில் விஜய் ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியில் இருக்கின்றனர். யார் என்ன வேணாம் சொல்லட்டும் நாங்கள் கில்லி போல சொல்லி அடிப்போம் என்று சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது பீஸ்ட் படத்தின் இந்த வசூல் பற்றிய தகவலை திருப்பூர் தியேட்டர் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் விடுமுறை தினங்கள் முடிந்த போதிலும் இன்றும் கூட ரசிகர்களின் வரவு தியேட்டர்களில் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதனால் மிக குறுகிய காலத்தில் அதிக அளவு வசூலை பெற்ற மிகச் சில திரைப்படங்களில் பீஸ்ட் திரைப்படமும் இணைந்து சாதனை படைத்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்