வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

இந்த 3 ராசிக்காரர்கள் எல்லாம் ரொம்ப டேஞ்சர்.. பத்து அடி தள்ளியே தான் இருக்கணுமாம்

நவகிரகங்களின் செயல்பாடுகளைப் பொறுத்து ஒருவரின் வாழ்க்கை அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதன் அடிப்படையில், கிரக நிலைகளை பொறுத்து ஒவ்வொருவரின் குணம், பணம், திடம், அதிர்ஷ்டம், எல்லாம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அப்படி, ராசிகளுக்கு பொதுவான குணங்கள் என்று ஒரு சிலது இருக்கும். அப்படி, இந்த முக்கிய ராசிக்காரர்கள் எல்லாம் கொஞ்சம் டேஞ்சர் தானாம். அவர்களிடம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டுமாம்.

  1. மேஷ ராசி: இவர்கள் இயற்கையாகவே கொஞ்சம் பிடிவாத குணம் கொண்டவர்கள். தான் நினைத்ததை அடைய எந்த எல்லைக்கும் செல்வார்களாம். ரொம்ப டாமினேட் செய்பவர்களாகவும் இருப்பார்கள். சில நேரங்களில் இரக்கம் என்பதே இருக்காதாம். தான் நினைத்ததை அடைய தவறு என்று தெரிந்தாலும், அதை செய்வார்களாம்.

அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு பெரிதாக மதிப்பு கொடுக்க மாட்டார்களாம். தான் உணர்வு தான் முக்கியம் என்று கொஞ்சம் சுயநலமாக இருப்பார்களாம். மேலும் வேலை, உத்தியோகத்தில் உயர்வு என்று வரும்போது தந்திரமாக நரி போல செயல்படுவார்களாம். தனக்கானதை வென்றெடுக்க, எல்லா சகுனி வேலைகளையும் பார்ப்பார்களாம்.

  1. மிதுன ராசி: இவர்களுக்கு இரட்டை முகங்கள், வெளியில் நல்லவர்களை போல தன்னை காட்டி கொள்வதில், இவர்களை மிஞ்ச யாரும் இல்லை. ஒருவர் மீது இவர்களுக்கு வெறுப்பு வந்துவிட்டால் அவர்கள் மீது வதந்திகளை பரப்புவார்கள்.

ஒரு உறவு வேண்டுமென்றால் அதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். அவர்களிடம் உண்மையாகவும் மற்றும் நேர்மையாகவும் இருக்க தயங்க மாட்டார்கள். ஆனால் தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டால் உணர்ச்சிரீதியாக அவர்களை காயப்படுத்துவார்கள்.

  1. சிம்ம ராசி: தனக்கு கீழ் தான் எல்லோரும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அடுத்தவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கும் பழக்கம் இவரிடம் இல்லை. உணர்வுகளை மதிக்கமாட்டார்கள். வேலையாட்களிடம் நல்ல பெயர் வாங்க, பாடுபடுவார்கள். ஆனால் வீட்டில் உள்ளவர்களை நோகடிப்பார்கள்.

தான் சொல்வது மட்டும் தான் சரியாக இருக்கும், மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற எண்ணம் இவர்களுக்குள் வேரூன்றி இருக்கும். ஒரு விஷயம் தெரியவில்லை என்றாலும், அதை தெரிந்த மாதிரியே காட்டிக்கொள்வார்கள். மேலும் தன்னை காப்பாற்றிக்கொள்ள யாரை வேண்டும் என்றாலும் பலிகடாவாக ஆகிவிடுவார்கள்.

- Advertisement -

Trending News