fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கே எல் ராகுல், ஹர்டிக் பாண்டியா சஸ்பெண்ட். அணியில் சேர்க்கப்பட்டார் தமிழக வீரர்.

kl_rahul_and_pandya

Sports | விளையாட்டு

கே எல் ராகுல், ஹர்டிக் பாண்டியா சஸ்பெண்ட். அணியில் சேர்க்கப்பட்டார் தமிழக வீரர்.

இந்தியாவின் நெக்ஸ்ட் ஜென் கிரிக்கெட்டில் முக்கியமான இருவர் . ஸ்டைலிஷ் ஆசாமிகள். சிக்ஸ் பேக் பாடி , டேட்டோ, வித்யாசமான ஹேர் ஸ்டைல், நினைத்ததை தில்லாக, கெத்தாக பேசுபவர்கள் . எனினும் சில காலமாகவே இருவரும் நேரமும் பார்மும் துணை இல்லை.

ராகுல் பல மேட்சுகளாக பார்ம் சொதப்பல். பாண்டியாவோ காயம், தோணி மனைவி பிறந்த நாள் பார்ட்டியில் சிகிரெட் புகைப்பது என்று சர்ச்சை தான் . இந்நிலையில் காஃபீ வித் கரண் நிகழ்ச்சி வாயிலாக இருவருக்கும் வினை வந்தது . பெண்களை பற்றி தரக்குறைவாக பேசியது டிவியில்ஒளிபரப்பப்பட்டது . கூடவே எதிர்ப்பும் கிளம்பியது .

விதிமுறைப்படி இரண்டு போட்டிகளில் நீக்கப்படலாம் என்ற கருது நிலவியது. முதல் போட்டிக்கான அணியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டனர் . கேப்டன் கோலி, பயிற்சியாளர் சாஸ்திரி இருவர் அது அந்த வீர்களின் தனிப்பட்ட கருத்து டீம்மின் ட்ரெஸ்ஸிங் ரூம் கலாச்சாரம் அது இல்லை என்று மறுப்பு தெரிவித்தனர் .

பிசிசிஐ இந்த இரண்டு வீரர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர் . மேலும் அவர்கள் இருவரும் இந்தியா வந்த ஏழு நாட்களுக்குள் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் , அதன் பின் தான் நிர்வாகம் என்ன முடிவு எடுக்கும் என்பது தெரியும் .

Vijay Shankar

இந்நிலையில் உடனடியாக பாண்டியாவுக்கு பதிலாக விஜய் ஷங்கர் அணியில் இணைகிறார். மற்றும் ராகுலுக்கு பதிலாக 19 வயது ஷுபம் கில் நியூஸிலாந்து தொடரில் மட்டும் இணைவார் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் கட்டாயம் வேகப்பந்து வீசும் ஆல் ரௌண்டார் என்பதால் ஷங்கர் அணியில் கட்டாயம் இடம் பிடிப்பார் என்ற கருத்தே நிலவுகிறது .

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top