Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆயுதத்தை கையில் எடுத்த ஜேய் ஷா.. இனிதான் இருக்கு இந்திய அணிக்கு செக்!

BCCI-Cinemapettai-1.jpg

Sports | விளையாட்டு

ஆயுதத்தை கையில் எடுத்த ஜேய் ஷா.. இனிதான் இருக்கு இந்திய அணிக்கு செக்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் வீரர்களும், வர்ணனையாளர்களும் இந்திய அணியின் மோசமான செயல்பாடு வருத்தமளிக்கிறது என தெரிவித்து வருகின்றனர்.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 244 எடுத்த இந்திய அணி அடுத்த இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் எடுத்து மிக மோசமான ஆட்டம் ஆடியது. முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி அடுத்த இன்னிங்சில் 2 விக்கெட்டில் 93 ரன்கள் எடுத்து வென்றது.

இந்திய அணியின் இந்த செயல்பாடு பிசிசிஐக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்துள்ளது. பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளர் இந்திய அணியின் மோசமான தோல்வியினால் கடும் கோபத்தில் உள்ளனர்.

கங்குலியின் மோசமான அணி தேர்வுதான் இதற்கு காரணம் என்று அடுக்கடுக்கான புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும் பிசிசிஐ அமைப்பின் செயலாளருமான ஜேய் ஷா இந்திய அணி வீரர்களிடம் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

தோல்விக்கு காரணம் என்ன, அணியில் என்ன வேண்டும் எவ்வாறு மாற்றங்கள் செய்ய வேண்டும், அணிக்குள் என்ன பிரச்சனை, வீரர்களுக்குள் முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகிறதா?

இது போக மூத்த வீரர்களிடமும், ஜேய் ஷா சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார். உடனே ரிசல்ட் வேண்டும், அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் வீரர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இவரின் இந்த சந்திப்பு அணி வீரர்களிடையே மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடருக்கு பின் அணிக்குள் இதனால் பெரிய அளவில் மாற்றங்கள் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Losing-Indian-team-Cinemapettai.jpg

Losing-Indian-team-Cinemapettai.jpg

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top