நடைபெற்றுவரும் ஐபிஎல் சீசனில் பல இளம் வீரர்கள் பிசிசிஐ தலைவர் கங்குலியை வெகுவாககவர்ந்துள்ளன. அவர்களைப் பற்றி கங்குலி பாராட்டியும் பேசினார்.
இந்த ஐபிஎல் சீசனில் பல நட்சத்திர வீரர்களை, இளம் வீரர்கள் தங்கள் திறமையால் ஓரங்கட்டினார், இது தான் ஸ்பெஷல் என்று கூறலாம்.
ஒவ்வொரு அணியிலும் குறிப்பாக 2,3 வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஹைதராபாத் அணியில் தமிழக வீரர் நடராஜன் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.
அதே போல, வருண் சக்கரவர்த்தி, கம்லேஷ் நாகர்கோட்டி கொல்கத்தா அணியில் சிறப்பாக செயல்பட்டனர். சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெயிக்வாட், மும்பை அணியில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் என பல வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தினர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன், கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதி, வருண் சக்கரவர்த்தி, ஷுப்மன் கில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல் மற்றும் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் போன்ற இளம் வீரர்கள் தன்னைக் கவர்ந்ததாக பாராட்டினார்.
அவர்களுக்கு கூடிய விரைவில் வாய்ப்புகள் அமையும் என்று நம்பிக்கையூட்டினார் பிசிசிஐ தலைவர் கங்குலி.
