fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விட்டதை பிடிக்கும் பிசிசிஐ.. இந்திய அணியை காவு வாங்க காத்திருக்கும் 2021 ஆம் ஆண்டு போட்டிகள்!

IndianCricketeam-Cinemapettai

Sports | விளையாட்டு

விட்டதை பிடிக்கும் பிசிசிஐ.. இந்திய அணியை காவு வாங்க காத்திருக்கும் 2021 ஆம் ஆண்டு போட்டிகள்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 2020ஆம்  ஆண்டு கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக கழிந்த நிலையில், 2021இல் சேர்த்து வைத்து வேலை வாங்க திட்டம் தீட்டி உள்ளது பிசிசிஐ.

2020ஆம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு மோசமான ஆண்டாக அமைந்தது. ஆண்டின் துவக்கத்தில் பரவிய கொரோனா வைரஸ் கிரிக்கெட் போட்டிகளை முடங்கின. இந்திய அணி மார்ச் மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் இருந்தது.

பிசிசிஐ கடும் முயற்சி  செய்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2020 போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதுவே வீரர்கள் லாக்டவுனுக்கு பின் கலந்துகொண்ட முதல் போட்டியாகும்.

ஐபிஎல் முடிந்த கையோடு ஆஸ்திரேலிய தொடருக்கு சென்றுள்ளது இந்திய அணி.அதனை  தொடர்ந்து ஜூன் மாதம் இலங்கைக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

அங்கேயே ஆசிய கோப்பை 2021 தொடரில் பங்கேற்க உள்ளது. ஜூலை மாதம் ஜிம்பாப்வே சென்று, பின் இங்கிலாந்து நாட்டில் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. நவம்பரில் நியூசிலாந்து அணி இந்தியாவில் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

டிசம்பர் மாதம் இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளது. அங்கே மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

indian-team

indian-team

அது மட்டுமின்றி 2023 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்கு தொடர்கள் தயாராகி உள்ளது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Sports | விளையாட்டு

அதிகம் படித்தவை

To Top