fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஐபிஎல்லில் அலுங்காமல் குலுங்காமல் பல ஆயிரம் கோடியை அள்ளிய பிசிசிஐ.. தாதா போட்ட மாஸ்டர் பிளான் தெரியுமா.?

ipl-top-5-player

Sports | விளையாட்டு

ஐபிஎல்லில் அலுங்காமல் குலுங்காமல் பல ஆயிரம் கோடியை அள்ளிய பிசிசிஐ.. தாதா போட்ட மாஸ்டர் பிளான் தெரியுமா.?

2020 ஐபிஎல் தொடரில் பிசிசிஐக்கு நஷ்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் வருமானம் ஈட்டியுள்ளது.

ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. பின் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை வெற்றிகரமாக நடத்தி முடித்தது பிசிசிஐ.

இதன் பின்னணியில் பிசிசிஐ தலைவர் கங்குலியின் பல அதிரடி முடிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகள், ஐபிஎல் தொடரை நடத்த முன் வந்தது. அதில் விமான பயணம் குறைவாக இருக்கும் நாட்டை தேர்வு செய்தார் கங்குலி.

இதற்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரில் சில போட்டிகள் நடந்து இருந்ததாலும், அங்கே உள்ள மூன்று மைதானங்களுக்கு பேருந்திலேயே பயணம் செய்யலாம் என்பதாலும் அந்த நாட்டை தேர்வு செய்தார் கங்குலி. விமான பயணத்தின் செலவை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் விளம்பர வருவாய் குறைந்த நிலையில், வெளிநாட்டில் நடந்தாலும் கடந்த ஆண்டை விட சிக்கனமாக தொடரை நடத்த வேண்டும் என பிசிசிஐ திட்டம் தீட்டியது.

அடுத்து வெளிநாட்டில் தங்கினால் ஹோட்டல் அறைகளுக்கான செலவுகள் அதிகமாக இருக்கும். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் சுற்றுலா பாதிக்கப்பட்டு இருந்ததை பயன்படுத்தி பிசிசிஐ அதிகாரிகள் முன்பே துபாய், அபுதாபியில் ஹோட்டல் அறைகளை குறைந்த விலைக்கே முன்பதிவு செய்தனர்.

இதன் காரணமாக 2020 ஐபிஎல் இதுவரை இல்லாத அளவு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. பிசிசிஐ 4000 கோடி வருமானம் ஈட்டி உள்ளது, வரும் ஆண்டுகளில் இதைவிட அதிகமான வருமானம் அடைவதற்கு திட்டங்கள் தீட்டி வருகிறது பிசிசிஐ.

Sourav-Ganguly-cinemapettai1.jpg

Sourav-Ganguly-cinemapettai1.jpg

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top