fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

உச்சக்கட்ட சோதனையில் முக்கிய கிரிக்கெட் வீரர்.. பிசிசிஐ வைத்த அடுத்த செக், உறைந்து போன ரசிகர்கள்!

Bcci-Cinemapettai.jpg

Sports | விளையாட்டு

உச்சக்கட்ட சோதனையில் முக்கிய கிரிக்கெட் வீரர்.. பிசிசிஐ வைத்த அடுத்த செக், உறைந்து போன ரசிகர்கள்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17ஆம் தேதி அன்று தொடங்குகிறது.

ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ரோகித் சர்மா ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் 20 20 தொடர்களில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் ரோஹித் சர்மா தனது பிட்னஸை நிரூபித்துள்ளார். தற்போது ரோகித் சர்மாவின் காயம் முற்றிலும் குணமடைந்து விட்டது.

இதன் மூலம் இந்திய அணியில் இவர் மீண்டும் இணைவது உறுதியாகி உள்ளது. 14 நாட்கள் ரோஹித் சர்மா தொடர்ந்து கஷ்டப்பட்டு தனது உடல் எடையை கொஞ்சம் குறைத்து இருக்கிறார். அதேபோல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று தனது காயத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டு உள்ளார்.

ரோஹித் சர்மா தனது பிட்னஸ் டெஸ்டில் பாஸ் செய்துவிட்டாலும் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும்.அவரிடம் வேகம் குறைவாக இருக்கிறது, அவர் தன் வேகத்தை அதிகரிக்க வேண்டும், தொடர்ந்து கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ரோகித் இந்திய அணியில் இணைந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் விளையாட வேண்டும் என்றால், இந்திய அணியின் மருத்துவ குழு ஒப்புதல் அளிக்க வேண்டும், அதற்கு ரோஹித் சர்மா சிறப்பாக வலைப்பயிற்சி செய்ய வேண்டும். 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Rohit-Cinemapettai.jpg

Rohit-Cinemapettai.jpg

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top