அவமானத்தில் கூனி குறுகி வெளியேறும் போட்டியாளர்.. ட்விஸ்ட் வைக்கும் இந்த வார பிக்பாஸ் ஓட்டிங் லிஸ்ட்

BB7 Tamil: எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வாரம் பிக் பாஸில் கமலஹாசன் வரும் எபிசோடு அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் முழுக்க வீட்டில் நடந்த அராஜகங்களை, கமல் வந்து தட்டி கேட்டு ஆக வேண்டும் என்ற ஆதங்கத்தில் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு பக்கம் ஏஜென்ட் டீமுக்கு பதட்டம் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

ஏஜென்ட் டீம் இந்த வாரம் அடித்த கூத்திற்கு அளவே இல்லை என்று சொல்லலாம் அர்ச்சனா மற்றும் விசித்திராவை பழி வாங்குகிறேன் என்ற பெயரில் அராஜகம் செய்து விட்டார்கள். இந்தக் கூட்டத்தை உடைத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களும் குறி வைத்து ஓட்டு போட்டு முக்கியமான புள்ளி ஒருத்தரை வெளியே அனுப்ப திட்டமிட்டு விட்டார்கள்.

ஏஜென்ட் டீம் கடந்த வாரம் முழுக்க அர்ச்சனாவை ரவுண்டு கட்டினார்கள். ஆனால் அர்ச்சனா கூட்டமாக வந்த அத்தனை பேரையும் தனியாக நின்று சமாளித்தது பார்வையாளர்களால் பாராட்டை பெற்றது. இதனால் இந்த வாரமும் அர்ச்சனா தான் ஓட்டிங் லிஸ்ட் முதலிடத்தில் இருக்கிறார். அதைத்தொடர்ந்து விசித்ரா இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

Also Read:மாயாவின் முகத்திரையை கிழித்த அமுல் பேபி.. நடுங்கி போய் நின்ற பூர்ணிமா

நடிகர் தினேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பொழுது இவர் கடைசி வரை போட்டியில் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட தினேஷ் ஓட்டிங் லிஸ்டில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ஏஜென்ட் டீமிலிருந்து ஒருவரை வெளிய அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆர் ஜே பிராவோவுக்கு தொடர்ந்து ஓட்டு போட்டு நான்காம் இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார்கள் என்ற போட்டி ஐஷு மற்றும் பூர்ணிமாவுக்கு இடையே இருந்தது. முக்கிய புள்ளியை வெளியேற்றினாலே ஏஜென்ட் டீம் அடங்கிவிடும். இதனால் ஐஷுவுக்கு ஓட்டுகள் கொஞ்சம் அதிகரித்தது. இப்போது ஓட்டிங் லிஸ்டில் கடைசியில் இருப்பது பூர்ணிமா தான். இந்த வாரம் அவர்தான் வெளியேற இருக்கிறார்.

tamil-bb7-voting-result-goes-viral
tamil-bb7-voting-result-goes-viral

இந்த வாரம் முழுக்க பூர்ணிமா அதிகமாகவே ஆடிவிட்டார். அவர் வீட்டை விட்டு வெளியே போனாலே ஒட்டுமொத்த ஏஜென்ட் டீமும் வாயை மூடிக்கொள்ளும் என்பதுதான் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு. இதற்கு இடையே பிக் பாஸ் எதுவும் சொதப்பாமல் இருந்தால், நாளை மூட்டை முடிச்சை கட்டப் போவது பூர்ணிமாவாகத்தான் இருக்கும்.

Also Read:பிரதீப் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகி.. மொத்த பிரச்சனைக்கும் காரணமான கருப்பு ஆடு