வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

வாய்க்கொழுப்பு அதான் அனுப்பிச்சிட்டாங்க.. வெளியே போய் வக்கனையா பேசி வாய்ப்பு தேடும் BB7 போட்டியாளர்

BB7 Contestants: மற்ற சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 7 துவங்கப்பட்ட நாளிலிருந்தே காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் சற்றும் எதிர்பாராத வகையில் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிலிருந்து அனன்யா வெளியேற்றப்பட்டார். அதன் பின்பு பவா செல்லதுரை உடல் நலக்குறைவை காரணம் காட்டி வெளியேறினார்.

பின் டான்சர் விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இதற்கு காரணம் அவர் முரட்டுத்தனமாக விளையாடியதுதான். அது மட்டுமல்ல வன்முறையாக கையாண்டதற்கு ஸ்ட்ரைக் கார்டையும் கமல் கொடுத்தார்.

இதே போன்று இன்னும் இரண்டு கார்டுகளை பெற்றால் வெளியேற்றி விடுவேன் என்று ஆண்டவர் வார்னிங் கொடுத்தார். அப்படியும் தன்னுடைய நடவடிக்கை மாற்றிக் கொள்ளாத விஜய் வர்மா, சகப் போட்டியாளர்களை தூக்கி பந்தாடியது, கோபமாக முறைத்து கையை நீட்டியது என வன்முறையின் உச்சத்திற்கே சென்றார்.

‘வெளியே என்னோட பசங்க இருக்காங்க வகுந்துருவாங்க’ என்றெல்லாம் வாய் கொழுப்புடன் பேசிய விஜய் வர்மாவிற்கு அதிரடியாக ரெட் கார்ட் கொடுத்து எலிமினேட் செய்துவிட்டனர். வெளியே போனதும் விஜய் வர்மா அளித்த பேட்டி இப்போது வைரல் ஆகிறது. இதில் அவர் கேவலமாக வாய்ப்பு தேடுகிறார்.

‘என்னை தேவையில்லாமல் வெளியேற்றி விட்டதாக மக்கள் உணர்கிறார்கள், எனக்கும் அது தோன்றியது. எதிர்பாராத நேரத்தில் என்னை வெளியேற்றி விட்டார்கள். ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பிறகு மக்களின் சப்போட்டை பார்க்கும்போது புல்லரிக்கிறது.

எனக்கு மட்டும் இன்னொரு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் வித்தியாசமாக விளையாடுவேன். அது மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும்’ என்றெல்லாம் விஜய் வர்மா சமீபத்திய பேட்டியில் வக்கனையா பேசி, வைல்ட் கார்டு போட்டியாளராக மறுபடியும்  என்ட்ரி ஆக பார்க்கிறார்.

- Advertisement -

Trending News