BB7 Voting List: மக்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இந்த மாதம் ஒன்றாம் தேதி ஆரம்பித்தது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா வெளியேறி இருக்கும் நிலையில் நான்காவது வாரத்திற்கான ஓட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதி நாளான இன்று வெளியாகி இருக்கும் ஓட்டிங் லிஸ்ட்டை பற்றி பார்க்கலாம்.
கடந்த வாரம் 11 பேர் நாமினேசன் செய்யப்பட்ட நிலையில் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். அதேபோன்று இந்த வாரம் அக்ஷயா, விக்ரம், வினுஷா, யுகேந்திரன், விஷ்ணு, கூல் சுரேஷ், மாயா, ஜோவிகா, மணிச்சந்திரா, நிக்சன், பிரதீப் என 11 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்தார்கள். இதற்கான ஓட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இன்று வெளியாகி இருக்கும் ஓட்டிங் லிஸ்டில் வழக்கம் போல பிரதீப் 34.17 சதவீதம் ஓட்டுக்களோடு முதலிடத்தில் இருக்கிறார். கடந்த இரண்டு வாரங்களாகவே பிரதீப்பிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் நிக்சன் இருக்கிறார். இந்த வார இறுதியில் நிக்சன் கொஞ்சம் தன்னுடைய நடவடிக்கைகளால் பெயரை டேமேஜ் செய்து கொண்டாலும் 12.64% ஓட்டுக்களோடு இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்.
பிக் பாஸ் ஓட்டிங் லிஸ்ட்
மணிச்சந்திரா இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் சென்ற மணிச்சந்திரா பார்வையாளர்களை கவர்ந்ததால் 8. 59 சதவீதம் ஓட்டுக்களோடு மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். ஸ்டார் பிளேயராக பார்க்கப்படும் ஜோவிகா மணிக்கு அடுத்த இடத்தில் 7 புள்ளி 97 சதவீதம் ஓட்டுக்களோடு இருக்கிறார். கூல் சுரேஷ் 7.12 சதவீதம் ஓட்டுகள் பெற்றிருக்கிறார்.
அவர்களைத் தொடர்ந்து மாயா, விஷ்ணு, யுகேந்திரன், வினுஷா அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறார்கள். நேற்று வரை இறுதியில் இருந்த வினுஷா தற்போது முன்னேறி இருக்கிறார். விக்ரம், அக்ஷயா அடுத்தடுத்து தொடர்ந்து இறுதி பட்டியலில் இருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் 5 வைல்டு கார்டு என்ட்ரி வர இருப்பதால் இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கும் என சொல்லப்படுகிறது.
பிக் பாஸ் ஓட்டிங் லிஸ்ட்
அப்படி டபுள் எவிக்சன் நடைபெற்றால் சரவண விக்ரம் மற்றும் அக்ஷயா தான் வெளியேறுவார்கள். இருந்தாலும் இந்த வாரம் ஒரு போட்டியாளர் தான் வெளியேற்றப்படுவார் எனவும் சொல்லப்படுகிறது. அப்படி என்றால் அக்ஷயா தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இப்போதைக்கு சரவண விக்ரமா அல்லது அக்ஷயாவா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.