குழாயடி சண்டையை மிஞ்சும் பிக்பாஸ் வீடு.. ராஜுவால் அடித்துக்கொள்ளும் பிரியங்கா-அக்ஷரா

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய கடுமையான போட்டிக்கு பின்னர் போட்டியாளர்கள் அனைவரும் சிறிது ஓய்வுடன் இருந்தனர். ஆனால் அவர்களை ஓய்வெடுக்க விடாமல் பிக்பாஸ் மற்றொரு டாஸ்கை கொடுத்துள்ளார்.

அதாவது கார்டன் ஏரியாவில் ஒரு பாக்ஸ் போட்டோ ஒட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. மணி அடித்தவுடன் போட்டியாளர்கள் அதை நகர்த்த வேண்டும். மீண்டும் மணி அடிக்கும் பொழுது யாருடைய போட்டோ மேல்நோக்கி இருக்கிறதோ அவர் போட்டியிலிருந்து விலக்கபடுவார் என்று பிக்பாஸ் அறிவிக்கிறார்.

இந்தப் போட்டியின் போது ராஜூ அந்த பெட்டியின் மீது ஏறி அமர்ந்து கொள்கிறார். இதனால் கோபமடையும் அக்ஷராவிடம், ராஜு இறங்க முடியாது என்று மறுப்பு சொல்கிறார். மேலும் அவர்கள் இருவருக்கிடையே வாக்குவாதம் அதிகரித்ததால் சக போட்டியாளர்கள் அக்ஷராவை சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றனர்.

ஆனால் அக்ஷரா, ராஜீவிடம் இனி என் வாழ்க்கையில் நான் உன்னிடம் பேசவே மாட்டேன் என்று எகிறி கொண்டிருக்கிறார். அவரை சமாதானப்படுத்த வந்த பிரியங்காவையும், அக்ஷரா எடுத்தெறிந்து பேசுகிறார்.

இதனால் கோபமான பிரியங்கா நான் உன்கிட்ட மரியாதையா பேசினா, நீயும் அப்படியே பேசு என்றும், இந்த மாதிரி கோபமா பேசுற வேலை எல்லாம் எங்கிட்ட வச்சுக்காத என்று எச்சரிக்கிறார். அப்படியே இருவரும் மாறி மாறி கத்திக்கொண்டு குழாயடி சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

இவ்வளவு சண்டையிலும் தாமரை அமைதியாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஏனென்றால் அக்ஷரா, ராஜு இருவருமே தாமரைக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இன்று அவர் அமைதி காக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து கடுமையான போட்டிகள் வர இருப்பதால் இன்னும் இதுபோன்ற பல சண்டை காட்சிகளை நாம் பார்க்க இயலும். இன்று குழாயடி சண்டையாக இருக்கும் பிக்பாஸ் வீடு நாளை மீன் மார்க்கெட் சந்தையாக கூட மாறலாம்.