புதன்கிழமை, நவம்பர் 6, 2024

இந்த வாரம் பிக் பாஸில் வெளியேற போகும் கல்லுளிமங்கன்.. உச்சத்தை தொட்ட ராஜு பாய்

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் அளித்த வாக்கின் அடிப்படையில் குறைந்த ஓட்டுக்களை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார்கள்.

அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் பிரியங்கா, இமான் அண்ணாச்சி, சிபி, ராஜு, அபிஷேக், பாவனி, தாமரைச்செல்வி, அக்ஷரா, வருண் ஆகிய 10 பேர் நோமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இதில் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் ராஜா கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்டும் நோக்கத்தில் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் அவர் வந்த பிறகு விளையாட்டை நன்றாக விளையாடிக் கொண்டிருந்த பிரியங்கா மறுபடியும் தன்னுடைய கூட்டணியை அபிஷேக் ராஜாவுடன் இணைத்துக்கொண்டு விளையாட்டை வேறு விதமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இதற்கெல்லாம் பிரியங்காவை விட அபிஷேக் தான் காரணம் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டு தங்களுடைய குறைந்த ஓட்டை அபிஷேக் ராஜாவிற்கு அளித்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற உள்ள நபராக அபிஷேக் மாறி உள்ளார்.

bb-vote-cinemapettai
bb-vote-cinemapettai

அதைப்போன்று பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் அபினை இந்த வாரமும் குறைந்த வாக்குகளைப் பெற்ற டேஞ்சர் சோனில் உள்ளார். ஆகவே மிக குறைந்த வாக்குகளை பெற்ற அபிஷேக் ராஜா இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது.

bb5-vote-conemapettai9
bb5-vote-conemapettai

அத்துடன் அபிஷேக் ராஜாவை விட கொஞ்சம் அதிக வாக்குகளை பெற்று கடைசி இரண்டாவது இடத்தை அபினை பெற்றுள்ளதால், அவரும் வெளியேற வாய்ப்புள்ளது. எனவே இவர்கள் இருவருள் யார் பிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் வெளியேற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -spot_img

Trending News