புதன்கிழமை, நவம்பர் 6, 2024

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பைனல் லிஸ்ட்.. சூடுபிடிக்கும் பிக் பாஸ் சீசன்5

இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வத்துடன் அனுதினமும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இன்னும் ஒரே வாரத்தில் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். எனவே இறுதிப்போட்டிக்கு சிபி உடன் கடுமையாக போட்டியிட்டு டிக்கெட் டு பின்னாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று முதல் ஆளாக பைனலுக்கு அமீர் சென்றார்.

அவரைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் போட்டியாளர்களால் நிரூப் தேர்வு செய்து இரண்டாவது ஃபைனல் லிஸ்ட் ஆக முன்னேறி விட்டார். அவரைத் தொடர்ந்து மூன்றாவது பைனல் லிஸ்ட் ஆக மக்கள் அளித்த ஓட்டிங் அடிப்படையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமலஹாசன் தேர்வு செய்தார்.

எனவே நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் தாமரைச்செல்வி, பாவனி, ராஜீ, பிரியங்கா இவர்களால் நான்கு பேரில் ராஜு அதிக வாக்குகளைப் பெற்று மூன்றாவது பைனல் லிஸ்ட் ஆக மக்களால் தேர்வு செய்யப்பட்டார். ராஜீ தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பைனலிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தான் நிச்சயம் வெற்றியாளராக இருக்க முடியும் என ரசிகர்களின் கணிப்பு. இவரைத் தொடர்ந்து பிரியங்கா நான்காவது பைனல் லிஸ்ட் ஆகவும், பாவனி ஐந்தாவது பைனல் லிஸ்ட் ஆகவும் தேர்வாகியுள்ளார். கடைசி இடத்தைப் பிடித்த தாமரை, இந்த சீசனில் இறுதிப் போட்டியாளராக எலிமினேட் செய்யப்பட உள்ளார்.

சாதாரண குடும்பத்திலிருந்து தன்னுடைய ஏழ்மை கூட பொருட்படுத்தாமல் நாடகக் கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் தாமரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனியாளாக போராடியது பாராட்டுக்குரியது. எனவே தாமரைச்செல்வி இந்த சீசனின் ஐகான் என்று ரசிகர்களால் புகழப்படுகிறார்.

அடுத்த வாரம் நடைபெறும் டாஸ்கின் அடிப்படையிலும், மக்கள் அளிக்கும் ஓட்டின் அடிப்படையிலும் ராஜு இந்த சீசனின் வெற்றியாளராக மாறிவிடுவார் என்று சமூக வலைதளங்களில் பிக்பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News