வெள்ளிக்கிழமை, நவம்பர் 8, 2024

பாவனி-அமீர் உறவை விமர்சிக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள்.. வயித்தெரிச்சலில் அபினை!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது சண்டை சச்சரவுடன் காரசாரமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியான டான்ஸ் மாஸ்டர் அமீரை, இமான் அண்ணாச்சி தனியாக அழைத்துப் பேசினார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஒரு சில நாட்களுக்குள்ளேயே பாவனியுடன் நட்பு ரீதியாக பழகிக் கொண்டிருந்த அமீர், பாவனியை அடித்துப் பேசி விளையாட ஆரம்பித்து விட்டார். இதனை பிக்பாஸ் வீட்டில் வயதில் மூத்த நபரான இமான் அண்ணாச்சியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஆகையால் இமான் அண்ணாச்சி, அமீரை தனியே அழைத்து ‘இதுபோன்று பாவனியுடன் எல்லைமீறி பழகுவதை நிறுத்திக்கொள். இல்லையென்றால் உன்னுடைய பெயர் டேமேஜ் ஆகிவிடும். அடித்து விளையாடும் போது படாத இடத்தில் பட்டு அதுவே குத்தம் சொல்வதற்கு காரணமாக மாறிவிடும்’ என்று அறிவுரை கூறினார்.

அதேபோன்று ராஜு இதுகுறித்து ஏற்கனவே அமீரிடம் பேசியுள்ளார். ஆகவே பிக்பாஸ் வீட்டில் அமீர் மற்றும் பாவனி இருவரும் பழகுவது பிக் பாஸ் போட்டியாளர்களுக்குகே பிடிக்கவில்லை. அத்துடன் அமீர் வந்தபிறகு பாவனி அபினையுடன் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டிருக்கிறார்.

அபினைக்கும் பாவனி மற்றும் அமீர் இருவரும் நெருக்கமாக பேசிப் பழகுவதைப் பார்க்க முடியவில்லை. இதனை அவ்வப்போது அவர் ஒரு சில செயல்களில் அபினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த உடனே பிரியங்கா மற்றும் அபிஷேக் குறித்து ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருந்ததை கமல் முன்பே நச்சு நச்சுன்னு போட்டு உடைத்த அமீர், தற்போது பாவனியுடன் அதிக நேரத்தை செலவிட்டு தன்னுடைய தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிறார்.

எனவே ராஜு மற்றும் இமான் அண்ணாச்சி சொன்ன அறிவுரையை ஏற்று, அமீர் இனி வரும் நாட்களில் உஷாராக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

- Advertisement -spot_img

Trending News