பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேனின் வேலன் எப்படி இருக்கு.. திரைவிமர்சனம் இதோ!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முகேன் ராவ் நடித்த வேலன் திரைப்படம் டிசம்பர் 31-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டது. எனவே இந்தப் படத்தை குறித்த கலவையான விமர்சனம் தற்போது சமூக ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. வேலன் திரைப்படத்தில் முகேன் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிரபு-ஸ்ரீரஞ்சனி இவர்களின் தம்பதியருக்கு மகனாக கண்டிக்கபட்டுள்ளார்.

இந்த படத்தில் வழக்கம்போல் கதாநாயகி மீனாட்சியை ஒரு தலையாக காதலித்து பின்பு, இருவரும் காதலர்களாக மாறி விடுகின்றனர். இன்னிலையில் இந்த செல்வந்த குடும்பத்தின் பரம்பரை பகை காரணமாக ஹரிஷ் பெராடி வில்லனாக வந்து முகேன்-மீனாட்சி காதலுக்கு முட்டுக்கட்டையாக மாறிவிடுகிறார்.

இதற்கிடையில் முகேனின் அப்பா பிரபு படத்தின் மற்றொரு கதாநாயகி மரியாவிற்கும் முகேனுக்கும் திருமணம் நடத்தி தருவதாக வாக்களிக்கிறார். இந்த சூழலில் கதாநாயகன் தன்னுடைய காதலியை கரம் பிடிப்பாரா? வில்லனை சமாளித்து அவரிடமிருந்து குடும்பத்தை காப்பாற்றுவாரா? என்ற கேள்விகளுக்கு பதில் தான் படத்தின் மீதிக்கதை.

இந்தப்படம் வழக்கம்போல் தமிழ் சினிமாவில் வெளிவரும் குடும்பம் கதை திரைப்படமாக இருந்தாலும், சூரியின் நடிப்பு வேலன் படத்தில் பெரிதளவு பேசப்படுகிறது. படத்தின் முதல் பாதி கொஞ்சம் போரடித்தாலும் அடுத்த பாதி விறுவிறுப்புடன் நகர்கிறது.

mugen-velan-poster
mugen-velan-poster

இருப்பினும் நடிகர் முகேன் நடிக்கும் முதல் படம் என்பதால், வேலன் படத்தில் சில இடங்களில் ஓவர் ஆக்சன் காட்டியுள்ளார். ஆனால் பெரும்பாலான இடங்களில் தனது பிரமாதமான நடிப்பை வெளிக்காட்டி உள்ளார். அத்துடன் வேலன் படத்தில் நடித்த நடிகர்கள் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

படத்தின் மைனஸ் ஆக பார்க்கப்படுவது, படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகள். ஏனென்றால் படத்தின் இயக்குனர் கவின் ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தத் தவறி உள்ளார். இருந்தபோதிலும் வேலன் படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் மக்களிடையே பாராட்டை பெற்ற திரைப்படமாக மாறிவிட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்