சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அனுஷ்காவுக்கு திருமணம் ஆகாததற்கு காரணம் இதுதான்.. வம்புக்கு இழுத்த பயில்வான்

அனுஷ்காவிற்கு தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. கடந்த 2, 3 வருடங்களாக பட வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் அனுஷ்காவை பற்றி சில விஷயங்களை தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.

அதாவது அனுஷ்கா ஆர்யாவுடன் இணைந்து நடித்த இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்து இருந்தார். ஆனால் அதன் பிறகு தன் உடல் எடையை குறைக்க அனுஷ்கா மிகுந்த சிரமப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு அப்போதே பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.

அதன்பிறகு பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அனுஷ்காவை தேடி வந்தது. இப்படத்தில் அனுஷ்கா ஓரளவு எடையை குறைத்து இருந்தார். மேலும் தற்போதும் யோகா மற்றும் ஆயுர்வேத முறை படை தனது உடலின் எடையை குறைக்க முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் பயில்வான் கூறுகையில் அனுஷ்கா, பிரபாஸ் உடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் அதன் பிறகு இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டு நண்பர்கள் என கூறியதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது 40 வயதை நெருங்கிய அனுஷ்காவிற்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள்.

அனுஷ்காவின் உடல் எடை அதிகமாக இருப்பதால் யாரும் இவரை திருமணம் செய்து கொள்ள முன் வருவதில்லை எனவும் திரைப்பட வாய்ப்புகளும் வராததற்கு அவரது உடல் எடையை காரணம் என பயில்வான் தெரிவித்துள்ளார். மேலும் அனுஷ்காவை பார்க்க சில மாப்பிள்ளைகள் வந்துள்ளனர்.

ஆனால் அனுஷ்காவை விட ஒரு வயது, இரண்டு வயது மூத்தவர்கள் ஆக உள்ளவர்களை பார்த்தாலும் அவர்களை விட அனுஷ்கா வயது மூத்தவராக தெரிகிறார். இதனால்தான் தற்போது வரை அனுஷ்காவிற்கு திருமணமாகாமல் உள்ளது என பயில்வான் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Trending News